Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அராஜகத்தின் உச்சத்தில் இருக்கிறார் ஜெயலலிதா! -விளாசும் விஜயகாந்த்

ஈரோடு: அராஜகத்தின் உச்சத்தில் இருக்கிறார் ஜெயலலிதா என்று ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ''அ.தி.மு.க., தி.மு.க. கடந்த 35 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

கல்வியை வியாபாரம் ஆக்கியது யார்...? ஜெயலலிதாதான். முதலமைச்சர் ஜெயலலிதாவை பொறுத்தவரை யாராவது இறந்தால் நிதி உதவி அறிவிப்பார். உயிரின் மதிப்பை, பணம் அறிவித்தால் ஈடாகிவிடும் என ஜெயலலிதா நினைக்கிறார். ஜெயலலிதா கலந்துகொள்ளும் அ.தி.மு.க. பிரசார கூட்டத்திற்கு காசு கொடுத்து மக்களை அழைத்து வருகிறார்கள்.

தான் கலந்துகொள்ளும் பிரசார கூட்டங்களுக்கு ஆடு, மாடுகளை போல் அப்பாவி மக்களை அழைத்து வந்து தண்ணீரின்றி, உணவின்றி அடைத்து வைத்து அராஜகத்தின் உச்சியில் ஜெயலலிதா இருக்கிறார்" என்று குற்றஞ் சாட்டினார்.

கூட்டம் முடிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விநாயகமூர்த்தி சால்வையோடு விஜயகாந்தை நெருங்கினார். அப்போது விஜயகாந்த், அவரை பார்த்து நாக்கை துருத்தி கையை ஓங்கினார். ஆனால், விஜயகாந்த் யாரை பார்த்து இதை செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்றாலும். கூட்டணிக்கட்சியினரை பார்த்துதான் இப்படி செய்தார் என்கிற வம்பு தற்போது இங்கிருந்து கிளம்பி இருக்கிறது.

- வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close