Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காவல்துறையை ஜெயலலிதா எதற்கு பயன்படுத்துகிறார் தெரியுமா?' -விளக்கும் கனிமொழி

தாராபுரம்: எதிர்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடுவதற்கும், அமைச்சர்களின் பாதுகாப்புக்கும் மட்டுமே காவல்துறையை ஜெயலலிதா அரசு பயன்படுத்துகிறது என்று தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் காளிமுத்துவை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்ட தி.மு.க. எம்.பி.கனிமொழி, ''அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு,  வெறும் கண்துடைப்பு நாடகம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் எதையும் அ.தி.மு.க. அரசு கொண்டுவரவில்லை.

தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்றுவிட்டது. அந்நிய முதலீட்டார்கள் இங்கே தொழில் தொடங்க அச்சப்படுவதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை என்றால் எப்படி பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். இது தான் ஜெயலலிதா அரசின் சாதனை. தமிழகத்தில் இளைஞர்கள் படிக்க கல்விக் கடன் வாங்கிவிட்டு, படித்து முடித்தபின் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வங்கிகள் அவர்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரித்துள்ளது. காவல் துறையை ஜெயலலிதா எதற்கு பயன்படுத்துகிறார்கள், எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதற்கும், அமைச்சர்களின் பாதுகாப்புக்கும் மட்டுமே காவல்துறையை அவர் பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதா ஆட்சி ஒரு செயலற்ற ஆட்சியாகதான் இருக்கிறது" என்று குற்றஞ்சாட்டினார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ