Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தே.மு.தி.க. அலுவலகத்தை தாக்கியவர்களை எச்சரிக்கும் வைகோ!

சென்னை: தே.மு.தி.க. அலுவலகத்தை தாக்கியவர்களை, வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என வைகோ எச்சரித்து உள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தலைநகர் சென்னையில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தின் மீது நேற்று (21.4.2016) சில வன்முறையாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது அராஜகம் மட்டுமல்ல, அப்பட்டமான கோழைத்தனம்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களை யார் ஏவிவிட்டிருந்தாலும் எங்கள் வெற்றிக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருவதால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும், அச்சத்தாலும் இந்த ஈனத்தனமான வேலையைச் செய்கின்றனர் என்பதுதான் உண்மையாகும்.

இதில் ஈடுபட்ட கட்சியினருக்கு வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். இந்தக் குண்டர்களை உடனடியாகக் கண்டுபிடித்து காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சி அலுவலகங்களுக்கும் முறையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close