Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காடுவெட்டி குருவுக்கு கல்தாவா? - ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம்வாக்காளர்கள் எண்ணிக்கை:

தொகுதி புராணம்:

வன்னியர்களும் தலித்துகளும் சமஅளவில் உள்ளனர். தவிர, முதலியார் சமூகத்தினரும் கணிசம். விவசாயம், சிமென்ட் ஆலைக் கூலிகள் அதிகம். அது போக முந்திரிக் கொட்டையை பிரித்தெடுப்பதும் பிரதான வேலையாக உள்ளது. 

 
வன்னியர்கள் பெல்ட்:

காலங்காலமாக வன்னிய மக்களின் கோட்டை. இதனால் தேர்தல்களில் வன்னியப் பின்புலம் பலமாக உள்ள கட்சிகளுக்கே  தொகுதி ஒதுக்கப்படும். பா.ம.கவுக்கும் அ.தி.மு.கவுக்கு குறிப்பிடத்தகுந்த அளவில் ஓட்டு வங்கி உள்ள தொகுதி. 


தொகுதியின் தலையாய பிரச்னைகள்:

அரியலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி ஜெயங்கொண்டம். இங்குள்ள முக்கியப் பிரச்னையே நிலக்கரிதான். அரசின் நிலக்கரி திட்டத்திற்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள். நிலக்கரிக்கு அடுத்தபடியாக சமீபத்தில் கால்பதித்த பாறை எரிவாயு திட்டம் கூடுதல் டென்ஷனை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜேந்திர சோழனின் பொன்னேரியை தூர்வாராமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவை தவிர, பல்வேறு நீர்நிலைகள் பராமரிப்பில்லாமல் அழிந்து வருகிறது.

தொகுதி முழுக்கவே அடிப்படை வசதிகளற்ற கிராமங்கள் மிக அதிகம். சாலை வசதி, போக்குவரத்து வசதிகளுக்காக தினம் தினம் மக்கள் போராடி வருகிறார்கள். ஒரே அரசு கலைக்கல்லூரி அரியலூரில் உள்ளதால், ஜெயங்கொண்டத்திற்கென ஒரு அரசுக் கல்லூரியை எதிர்பார்க்கிறார்கள். இதனால் வெளிமாவட்டங்களில் சென்று கல்வி கற்கும் வேண்டிய சிரமம் மாணவர்களுக்கு. பயன்பாட்டுக்கு வராத உடையார்பாளையம் பேருந்து நிலையம், கிடப்பிலிருக்கும் ஜெயங்கொண்டம் சாக்கடைப்பணிகள், தூர்வாரப்படாத ஏரிகள், நடைமுறைக்கு வராத முந்திரி தொழிற்சாலை வாக்குறுதிகள், குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு என தொகுதியின் எதிர்பார்ப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை.

என்ன செய்தார் இப்போதைய எம்.எல்.ஏ ‘காடுவெட்டி’ குரு..?

* எம்.எல்.ஏ குரு தொகுதிக்கு வராமல் இருப்பதே மிகப் பெரிய பிளஸ். சமஅளவில் தலித், வன்னிய மக்கள் இருப்பதால், குரு வந்தால் கலவரம் வெடிக்குமோ என்ற அச்சம்தான் காரணம்.

* தலித் பகுதிகளில் சமுதாயக் கூடம் கட்டியது, அரசுப் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்தது, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்பியது, அங்கன்வாடி, ரேசன் கடைகளை சில பகுதிகளில் அமைத்தது போன்றவவை குரு தரப்பினர் சொல்லிக் கொள்ளும் சாதனைகள். 

 

குரு மீதான விமர்சனங்கள்!

* சட்டமன்றத்திற்கே போகாமல் இருப்பதால், தொகுதி பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், கண்டு கொள்ளாமல் இருக்கிறார்!

* வன்னியர் சங்கத் தலைவராக இருந்தும் கட்சிக்காரர்களின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது!

* நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர குரல் கொடுக்காதது! 

ஆனால், தொகுதி மக்களின் இத்தகைய ஏமாற்றங்கள் மற்றும் அதிருப்திகளுக்கு மத்தியிலும் வன்னியர் சமூக வாக்குகளை நம்பி இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார் குரு.


 குருவை எதிர்க்கும் பிரதான வேட்பாளர்கள்:

ராம.ஜெயலிங்கம், அ.


(+) இரட்டை இலை சின்னம், வன்னியர் சமூகம் என்பதும் பிளஸ்.  

(-) ஜெயலலிதாவுக்கு நெருக்கடி கொடுத்த ‘ஜா’ - ‘ஜெ’ காலத்தில் ஜானகி அணியில் இணைந்து செயல்பட்டது, கட்சிக்காரர்களின் அதிருப்தி, தொகுதிக்குள் பரிச்சியம் இல்லாதது ஆகியவை மைனஸ். 


ஜி.ராஜேந்திரன், காங்கிரஸ் 


(+) அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஆஜர் ஆவது, முதலியார் சமூகம் என்பதால், பரவலாக இருக்கும் அவர் சமூகத்து வாக்குகள் கிடைக்கும் என்பது பிளஸ். 

 

(-) கட்சிக்காரர்களுக்கு எதுவுமே செய்யாத சீனியர் என்ற அறிமுகம்!


 கந்தசாமி, ம.தி.மு.க. 


(+)  மளிகைக் கடை மொத்த வியாபாரி. இழவு வீடு முதல் கல்யாணம் வரையில் கேட்காமல் பணத்தைக் கொடுப்பவர் என்பது பிளஸ். தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயரோடு இருப்பவர்.

 பல கட்சிகளிலிருந்து அழைப்பு வந்தும், ’வாழும் வரை வைகோ’வோடு என்ற கொள்கையில் இருப்பவர். பெரிய அளவில் குற்றம் சொல்ல முடியாதவர். 


வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி! 

பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் விவகாரத்தில், ஆரம்பகாலத்தில் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தவர்தான் குரு. அதிலும் ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதிக்க இருந்த நேரத்தில், 'என் மக்களின் அனுமதியில்லாமல் பன்னாட்டு கம்பெனிக்காரன் எவன் கால்பதித்தாலும் விரட்டி விரட்டி அடிப்பேன்' எனக் கொந்தளித்த குருவையும் அவர்கள் மறக்கவில்லை.

ஆனால், எம்.எல்.ஏவாக பதவியேற்ற பிறகு, நிலக்கரிக்காக நிலங்களை இழந்த விவசாயிகளுக்காக குரல் கொடுக்காதது குரு மீதான மதிப்பை சரியச் செய்திருக்கிறது. 'இந்தமுறை உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தரும் கட்சிக்கே வாக்கு' என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். அரியலூரில் புறக்கணிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றைத் தீர்க்கும் வகையில் உறுதியான வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கே ஓட்டு விழப் போகிறது. அனைத்தையும்விட, சாதிப் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளும் நல்ல தலைமையே ஜெயங்கொண்டத்தின் எதிர்பார்ப்பு.

இந்த காரணங்களினால் ஜெயங்கொண்டத்தில் இந்த முறை மாம்பழம் கனிவது கஷ்டம் என்றும்,   அ.தி.மு.க. வேட்பாளரான ராம.ஜெயலிங்கத்திற்கு ஜெயம் கிட்ட வாய்ப்பு பிரகாசம் என்கிறார்கள்.

அதை கடைசிநிமிட அமளிதுமளி பிரசாரங்கள் தீர்மானிக்கும்! 

 

எம்.திலீபன், ஆ.விஜயானந்த்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close