Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமதாஸ் கட்சியிலும் முன்னாள் வேட்பாளர்கள்! தொடரும் வேட்பாளர்கள் மாற்ற மேளா

அதிமுக, திமுகவை தொடர்ந்து பாமகவும் தனது கட்சி வேட்பாளர்களை மாற்றி வருகிறது. இன்று 4 தொகுதிகளின் வேட்பாளர்களை மாற்றி புதிய வேட்பாளர்களை அறிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முதல் ஆளாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கட்சி வேட்பாளர்களை அறிவித்தார். கடந்த 4ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜெயலலிதா, நேற்று வரை 8வது முறையாக வேட்பாளர்களை மாற்றிவிட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சி தலைவர் கருணாநிதி. பட்டியல் வெளியான அன்றே அரக்கோணம், ஒரத்தநாடு, விருத்தாசலம், சோழவந்தான், ஆலங்குடி ஆகிய தொகுதி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போர்க்கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து இந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டு புதிய வேட்பாளர்களை அறிவித்தார் கருணாநிதி. 5வது முறையாக திமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக பாமக இன்று 4  வேட்பாளர்களை மாற்றியுள்ளது. சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மீனாட்சி அனந்த் மாற்றப்பட்டு புதிதாக என்.சுரேஷ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், தளி தொகுதி வேட்பாளர் வெ.கந்தசாமி மாற்றப்பட்டு புதிதாக அருண்குமாரும், பாலக்கோடு தொகுதி வேட்பாளர் அ.சரவணன் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக கு.மன்னனும், திருத்துறைபூண்டி வேட்பாளர் உ.காசிநாதன் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக  ச.இராஜமோகனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மாற்றப்பட்டு வழக்கறிஞர் பாலு புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது, இரண்டாவது முறையாக பாமக வேட்பாளர்களை மாற்றியுள்ளது.
 

வேட்பு மனுத் தாக்கல் வரும் 29ம் தேதி முடிவடைகிறது. அதுவரை வேட்பாளர்கள் மாற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.


 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ