Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரியை கைப்பற்றுவாரா ஆஸ்டின்? தொகுதி நிலவரம்

 

வாக்காளர்கள்  எண்ணிக்கை

தொகுதி புராணம்:

இந்தியாவின் தென்முனை. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம் கன்னியாகுமரி. சென்னை கோட்டையில் ஆட்சி அமைக்க, கன்னியாகுமரியில் வெற்றி பெற்றால்தான் முதல்வர் நாற்காலி கிடைக்கும் என சென்டிமென்டை தனதாக்கிய தொகுதி கன்னியாகுமரி. திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த குமரி மாவட்டம், 1956-ம் ஆண்டு தாய் தமிழகத்துடன் இணைந்து, அதைத் தொடர்ந்து 1957-ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலின்போது கன்னியாகுமரி சட்டசபை தொகுதி உதயமானது.

சுற்றுலா தலமான கன்னியாகுமரி தொகுதி,  தி.மு.க.வின் சுரேஷ்ராஜனை தமிழக சுற்றுலா சுற்றுலாத் துறை அமைச்சராக இரண்டு முறை அமர்த்தியது. ஆறு முறை இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய உறுப்பினர் கே.டி.பச்சைமால் (அதிமுக)

கே.டி.பச்சைமால் (அதிமுக) - 86903

என்.சுரேஷ் ராஜன் (திமுக) - 69099

எம்.ஆர்.காந்தி  (பாஜக) – 20094            

2011    அதிமுக  கே. பி. பச்சைமால்      
2006    திமுக என். சுரேஷ்ராஜன்                  
2001    அதிமுக N.தளவாய் சுந்தரம்           
1996   திமுக  என். சுரேஷ்ராஜன்                
1991    அதிமுக M.அம்மா முத்து                 
1989    திமுக K.சுப்பிரமணிய பிள்ளை       
1984    அதிமுக   K.பெருமாள் பிள்ளை     
1980   அதிமுக  S.முத்துக்கிருஷ்ணன்          
1977   அதிமுக    C.கிருஷ்ணன்                     
1971    திமுக    கே.ராஜாபிள்ளை   
1967    இந்திய தேசிய காங்கிரஸ் பி.எம்.பிள்ளை      
1962    இந்திய தேசிய காங்கிரஸ் பி.நடராஜன்      
1957    சுயேட்சை     டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை   


சமுதாய வாக்குகள்

இதுவரை சாதி  எட்டிப்பார்க்காத கன்னியாகுமரி தொகுதியில், இந்த முறை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக சாதி உள்ளது.  வெள்ளாளர் சமூகம் சார்ந்த மக்களே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியா இருந்தனர். ஆனால் கடந்த தேர்தலுக்கு முன், தொகுதி சீரமைப்பில் பெருவாரியான நாடார் சமூக வாக்குகள் அதிகமாக கன்னியாகுமரி தொகுதிக்கு போனது. அதனால் கடந்த முறை அதிமுக வின் பச்சைமால் வெற்றி பெற்று வனத்துறை அமைச்சரானார். அதிமுக - திமுக - பாஜக - தேமுதிக நேரடியாக இந்த முறை களத்தில் சந்திக்கின்றன. நால்முனை போட்டியாக இருந்தாலும், திமுகவும் அதிமுகவும் வலுவாக முட்டி மோதுகின்றன.



களம் காணும் பிரதான வேட்பாளர்கள்

அதிமுக சார்பில்  முன்னாள் தமிழக அமைச்சரான தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். இவர் மாவட்டச் செயலாளர் என்பது கூடுதல்  பலம். வெள்ளாளர் சமூகத்தை சார்ந்தவர். இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் 17% இருக்கிறார்கள். இந்த முறை கண்டிப்பாக வெள்ளாளர்கள் கட்டுப்பாட்டில்தான் தொகுதி வரவேண்டும் என்கிற சாதி பொறி கிளம்பியுள்ளது.

 


திமுக சார்பில் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், தேமுதிகவில் மாநில பொறுப்பில் இருந்தவரும், தற்போது திமுகவில் சிறுபான்மை பிரிவில் மாநில பொறுப்பில் இருப்பவருமான முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின்  போட்டியிடுகிறார்.  இந்த தொகுதியில்  இந்து நாடார், கிறிஸ்துவ நாடார்கள் 40% இருக்கிறார்கள். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். ஆஸ்டின்,  அனைத்துக் கட்சி மக்களிடமும்  நல்ல மரியாதை பெற்றவர் .



தேமுதிக சார்பில் மாநில தொழிற் சங்க பேரவை பொதுச் செயலாளர் ஆதிலிங்க பெருமாள் போட்டியிடுகிறார். தொகுதிக்கு பரிச்சயம் இல்லாத முகம். தேமுதிக வீக்காக இருக்கும் தொகுதியில் ஒன்று கன்னியாகுமரி.



பாஜக சார்பில் நாகர்கோவில் நகர்மன்ற தலைவி மீனாதேவ் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் பாஜக சுமார் 20,000 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது. இவர் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவரது கணவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அதனால் இரு சமுதாய வாக்குகளை அள்ளி குவிக்கலாம் என கணக்கு போட்டு,  பாஜக இவரை இறக்கியுள்ளது. கடந்த தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் பாஜக டெபாசிட் வாங்காமல்போன தொகுதி கன்னியாகுமரி தொகுதிதான்.

ஸ்டார் வேட்பாளர்கள் களத்தில் இல்லாவிட்டாலும் அரசியல் விமர்சகர்களாலும் , வாக்களார்களாலும் ஸ்டார் தொகுதியாக கன்னியாகுமரி தொகுதி உள்ளது. இந்த முறை  சாதி வெறியோடு பிரசாரங்களும் நடக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரியில் கட்சி பலத்தைவிட சாதி பலத்தை காட்டுவதில்தான் கடும் போட்டி.

 ஃபைனல் பன்ச்

கன்னியாகுமரி தொகுதியை முக்கிய சுற்றுலாத் துறை தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி மீனவர்கள், கடலில் சென்று திடீர் இடர்பாடுகளில் சிக்கிக் கொள்ளும்பொழுது அவர்களை காப்பாற்ற, கன்னியாகுமரியில் ஒரு ஹெலிகாப்டர் தளம் அல்லது நவீன அதிவேக படகு வசதி செய்து தரவேண்டும்.

கடந்த 1984 முதல் பிரதான திராவிட கட்சிகளான அதிமுகவும் திமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளன. இன்றைய நிலவரப்படி ரேஸில் முன்னிலையில் இருப்பவர் ஆஸ்டின்.

 

- த.ராம்
படங்கள்: ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ