Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேட்பாளர்களை மாற்றுவதில் ஜெயலலிதா சாதனை!



தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராம.ராமநாதனை மாற்றியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அந்த தொகுதியில் எஸ்.ரத்னா போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 4-ம் தேதி வெளியானது. மறுநாளே அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து 6 முறை வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் 15, புதுச்சேரியில் 3 என மொத்தம் 18 வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். சிலர் தொகுதி மாறினர்.

கடந்த 17ம் தேதி,  7-வது முறையாக 8 தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். இதன்படி, அரக்கோணம் (தனி), பாப்பிரெட்டிபட்டி, சங்கராபுரம், ஈரோடு மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் 8வது முறையாக வேட்பாளர் மாற்றத்தை செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ராம.ராமநாதன் மாற்றப்பட்டு எஸ்.ரத்னா என்பவர்,  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மாற்றினாலும், முதல்வர் ஜெயலலிதா, தனது கட்சி வேட்பாளர்களை 8வது முறையாக மாற்றி முதலிடத்தில் உள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close