Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியார் பள்ளிகளில் நகை, பணம் பதுக்கல்! இது அலேக் ஐடியா

ரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்புநாதன் வீடு, கிடங்கு, தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன் தினம் இரவு வருமானவரித் துறையினரின் சோதனையில் கோடிக் கணக்கில்  பணம் சிக்கியது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

அன்புநாதன், பல மந்திரிகளின் அன்புக்கு பாத்திரமாக இருந்தாலும், அன்புநாதனின் அன்புக்கு பாத்திரமாக விளங்கியவர்,  வேலாயுதம்பாளையத்தை அடுத்த அதியமான் கோட்டையைச் சேர்ந்த  மணிமாறன்.
அன்புநாதனின் அத்தனை மூவ்களையும் நன்கு அறிந்தவர் இவர்தான் என்பதால், அன்புநாதனைப் பிடித்த அடுத்த சில நிமிடங்களில் மணிமாறன் வீட்டையும் வருமான வரித்துறையினர் சுற்றி வளைத்து சோதனையை மேற்கொண்டனர்.

அவர்கள் நினைத்தது போலவே மணிமாறனுக்கு சொந்தமான, இடங்களில் பல கோடி ரூபாய்களும், பணம் இருப்பு குறித்த  ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன.

அன்புநாதனுக்கு சொந்தமான  கிடங்கில் 10.33 லட்சரூபாய் , வீட்டில் 4.77 கோடி ரூபாய் ரொக்கமாக சிக்கியுள்ளன.  அதே போல் அவருக்கு சொந்தமான ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் மற்றும்  பணம் எண்ணக் கூடிய  12  மெஷின்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே வேளையில் அன்புநாதனின் நண்பர் மணிமாறன் வீட்டில் சிக்கியது எவ்வளவு? என்ற விபரத்தை மட்டுமல்ல, மணிமாறன் என்ற கேரக்டரையே இதில் கொண்டு வரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

சென்னை  எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள  அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்பவர், விஜய் கிருஷ்ணா. இவர் தந்தை விஜய்குமார். தஞ்சை மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய, இவரது வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலில் அதிகாரிகள் டீம்,  நேற்று (24.04.2016) பகல் அங்கே சென்றது.
வருமான வரித்துறை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் இணைந்து நடத்திய இந்த சோதனையில்  4.கோடியே 80 லட்ச ரூபாய்  ரொக்கப் பணம் சிக்கியது. 

சென்னையில் இந்த ரெய்டு போய்க் கொண்டிருந்த அதே வேளையில், கிருஷ்ணகிரி மாவட்டம்,   ஊத்தங்கரைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ரூ. 3 கோடியே 40 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், 150 தங்க நாணயங்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகளாலும், வருமான வரித்துறையினராலும் கைப்பற்றப் பட்டிருக்கிறது.

பள்ளியின் காவலாளி, யாரோ சிலர் தன்னை மிரட்டி, சில மூட்டைகளை பள்ளியில் வைக்கும்படி சொன்னதாக போலீசுக்கு கொடுத்த தகவலை ஏன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்ற ஒரு கேள்விக்கும் இதுவரையில் விடையில்லை.

பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் பணம் , நகைகளை பதுக்கி வைக்கும் வேலையில் கட்சியினர் இறங்கலாம் என்ற தகவல், கடந்த சில நாட்களுக்கு முன்னரே உளவுப் பிரிவினரால் நோட் போடப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நோட் ரிப்போர்ட் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும்  எப்படியோ கிடைக்கவே  தனியார் பள்ளிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அது கிருஷ்ணகிரியில் முதன் முதலாய் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

தனியார் பள்ளிகளை தீவிரமாகக் கண்காணிக்கும் வேளையில், தேர்தல் அதிகாரிகள் இறங்கியுள்ள அதே வேளையில், அதியமான் கோட்டை மணிமாறன் இப்போது எங்கே? என்ற கேள்வியும், அன்புநாதன் யார் பிடியில் விசாரணையில் இருக்கிறார் என்ற கேள்வியும்  மாவட்டங்களில் எழுந்துள்ளது.


-ந.பா.சேதுராமன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ