Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதி, ஜெயலலிதா... இரு முதல்வர் வேட்பாளர்களும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல்!

 

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் ஒரே நாளில் இன்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 82 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதில் பெரும்பாலும் சுயேச்சை வேட்பாளர்களும், சில சிறிய கட்சியின் வேட்பாளர்களும் அடக்கம்.

 

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. ஆர்.கே.நகரில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா, தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவரது தோழி சசிகலாவும் உடன் இருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர்  கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி முத்து மீனாட்சியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 

பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் வேட்பு மனுவை  தாக்கல் செய்தார்.

மேட்டூர் தொகுதியில் போட்டியிடம் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி, மேட்டூர் சார் ஆட்சியர் மேகநாதனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று நண்பகலில் வந்தார். திடீரென மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் மனுத் தாக்கல் செய்தார். வைகோ வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அவர் போட்டியிலிருந்து விலகிவிட்டார்.

படம்: ஜி.சதீஸ்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close