Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வாதிகாரி ஜெயலலிதா! - கொதிக்கும் குஷ்பு

சென்னை: மக்களை மதிக்கத் தெரியாத முதலமைச்சர் ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சிக்கு 2016 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்.

சென்னை ராயபுரம் தொகுதியில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு மேற்கொண்ட வாகன பிரசாரத்த்தின்போது, ''முதலமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தின்போது மக்கள் ஆடு, மாடுகளைப்போல் அடைத்து வைக்கப்பட்டு வதைக்கப்படுகின்றனர்.

ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். மக்களை மதிக்க தெரியாதவர் ஜெயலலிதா. அவங்களை பொறுத்தவரைக்கும், அவங்க எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் எப்படி அடிமைகளாக இருக்கிறார்களோ, அதேபோல் தமிழ்நாட்டில் ஓட்டு போடும் மக்களும் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு சர்வாதிகாரி.

இந்த சர்வாதிகாரி ஆட்சி மாறவேண்டும். மாத்துவோம். உங்களால் முடியும். மக்களை மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சிக்கு 2016 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்" என்றார் ஆவேசமாக.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close