Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் மீது அபார மரியாதை அதனால்...?! நா.ம.க.கார்த்தியின் முடிவு!

சென்னை: நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி சார்பில்,  தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் மொத்தமுள்ள தொகுதிகளில்,  30 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

1.முதுகுளத்தூர்-கே.உக்கிரபாண்டியன்,2.திருவாடானை-கே.பி.காளிதாஸ்,3.சங்கரன்கோவில்(தனி)- பி.சுப்புலட்சுமி,4.ராதாபுரம்- எஸ்.சுபாஸ்,5.கடையநல்லூர்-பி.கருப்பசாமி,6.திருநெல்வேலி- எம்.உடையார்,7பாளையங்கோட்டை-கே.வேதாந்தம்,8.ஆலங்குளம்- சி.ராமதுரை,9.தென்காசி-எம்.குமார்,10.தூத்துக்குடி-எம்-பேச்சுமுத்து பாலன் (அ) பி.முருகன்,

11.திருச்செந்தூர்-பி.முருகன், 12.ஸ்ரீ வைகுண்டம்-இ.இசக்கி,13.விளாத்திக்குளம்-ஏ.முருகன்,14.கோவில்பட்டி-ஏ.வெயில் முத்துப்பாண்டியன்,15.வில்லிவாக்கம்-ஆர்.ரகுராமன்,16.மதுரை(தெற்கு)-கே.லக்ஷ்மண மூர்த்தி,17.திருப்பரங்குன்றம்- கே.சாந்தி பூஷன்,18.உசிலம்பட்டி-கே.வி.வீரனராஜு,19.போடி நாயக்கனூர்- எஸ்.துர்கா லிங்கம்,20.அருப்புக்கோட்டை-ஆர்.சூர்யா மகராஜா,

21.ராஜபாளையம்-கே.பெருமாள், 22.சாத்தூர்-பி.கார்த்திகை ராஜன், 23. ஒட்டப்பிடாரம்- ஜி.ராஜேந்திர குமார், 24.ஸ்ரீவில்லிப்புத்தூர்(தனி)-பி.மனோகரன், 25- விருதுநகர்-எம்.லிங்கசாமி,26.அம்பாசமுத்திரம்-கே.முருகராஜ்,27.வாசுதேவநல்லூர்-ஆர்.சுடலை மாடத்தி, 28.திருமங்கலம்- எஸ்.ஜெயசக்திவேல்,29.சிவகாசி- கே.எஸ்.வைரமுத்து,30.மாதவரம்- பி.தென்னரசு தேவர்

ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கார்த்திக் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில், "சென்னை ஆர்.கே.நகரில் நிறுத்த எங்களிடம் சிறந்த வேட்பாளர் உள்ள போதிலும், மாண்புமிகு முதலமைச்சர் மீது வைத்துள்ள மரியாதை காரணமாக அவருக்கு எதிராக நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.                                  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ