Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவால் சசிபெருமாள் மகனுக்கு ஆபத்து! -எச்சரிக்கும் வைகோ

ஈரோடு: ஜெயலலிதாவால் சசிபெருமாள் மகனுக்கு ஆபத்து உள்ளது என்று தேர்தல் பிரசாரத்தின்போது வைகோ எச்சரித்து பேசினார்.

ஈரோட்டில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ, ''முதலமைச்சர் ஜெயலலிதாவால், சசிபெருமாளின் மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

மதுவிலக்குக்காக போராடி உயிரிழந்த சசிபெருமாளின் மகன் விவேக், முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு பொக்கே கொடுக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சியினரால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்.

அதற்கு விவேக் உடன்படாததால், அவரது உயிருக்கு ஜெயலலிதாவால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே, விவேக்கை என்னுடன் அழைத்து செல்கிறேன்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ