Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எனக்கு பொய் சொல்ல தெரியாது... அன்புமணிதான் அடுத்த முதல்வர்!’ அடித்துச் சொல்கிறார் ராமதாஸ்

திருப்பத்தூர்: 'அன்புமணிதான் அடுத்த முதல்வர். நான் நடந்து கொண்டிருப்பதைதான் சொல்கிறேன். எனக்கு பொய் சொல்ல தெரியாது' என்று தேர்தல் பிரசாரத்தில் ராமதாஸ் கூறினார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசும்போது, ''அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் எதிரும் புதிருமாக இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் சாராயம் மூலம் ரூ.75 ஆயிரம் கோடி லாபம் சம்பாதித்து இருக்கிறார்கள்.

இவர்கள் சாராயத்தை ஒழிக்கவே மாட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் பஞ்சபூதங்கள். அனைத்திலுமே பெரிய அளவில் ஊழல் செய்து இருக்கிறார்கள். இந்த 2 கட்சிகளையும் ஒழிக்கதான் பா.ம.க. அவதாரம் எடுத்து இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள பிரச்னைகள் என்ன? அதற்கு என்ன தீர்வு? என்பது அன்புமணிக்கு விரல்நுனியில் தெரியும். தமிழகம் எங்கும் அன்புமணி அலை வீசிக் கொண்டிருக்கிறது. இந்த அலை மே 1–ம் தேதிக்கு பிறகு வேகமாகி, மே.16–ல் இன்னும் வேகமாக இருக்கும்.

2 கோடி குடும்பங்களில் இரவு சாப்பிடும்போது, அன்புமணியை பற்றிதான் பேசுகிறார்கள். 2½ கோடி இளைஞர்கள் அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என தீர்மானித்துவிட்டார்கள். 20 சதவீத நடுநிலை வாக்காளர்கள், 20 சதவீத இளைஞர்கள், 25 சதவீத பெண்கள் என மொத்தம் 65 சதவீதம் பேர் அன்புமணி முதலமைச்சராக வேண்டும் என நினைக்கிறார்கள்.

மே 19–ம் தேதியன்று பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி. அன்புமணி தமிழக முதலமைச்சராவதை யாரும் தடுக்க முடியாது. அன்புமணியை பா.ம.க. வேட்பாளராக யாரும் பார்க்கவில்லை. பொது வேட்பாளராக தான் பார்க்கிறார்கள். நான் நடந்து கொண்டிருப்பதைதான் சொல்கிறேன். எனக்கு பொய் சொல்ல தெரியாது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ