Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடனில் சிக்கி தவிக்கிறாரா கேப்டன்? வியக்க வைத்த வேட்பு மனு!

 

தனக்கு கடன் ரூ.7 கோடியே 61 லட்சத்து 4 ஆயிரத்து 45 இருப்பதாகவும்,  மனைவி பிரேமலதா பெயரில் ரூ.1 கோடியே 87 லட்சத்து 34 ஆயிரத்து 38 கடன் இருப்பதாகவும் வேட்பு மனுவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்து இருந்தார். அதில், தனது பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 60 லட்சத்து 16 ஆயிரத்து 721 என்றும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.19 கோடியே 37 லட்சத்து 75 ஆயிரத்து 500 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி பிரேமலதா பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.4 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 893 என்றும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.17 கோடியே 42 லட்சத்து 76 ஆயிரத்து 600 என்றும், தங்கம் 1,410 கிராம் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரை சார்ந்தவர் 1- அசையும் சொத்தின் மதிப்பு ரூ.87 லட்சத்து 11 ஆயிரத்து 212 என்றும், அசையா சொத்து ரூ.1 கோடியே 97 லட்சத்து 22 ஆயிரம் என்றும், சார்ந்தவர் 2- அசையும் சொத்து ரூ.1 கோடியே 75 லட்சத்து 2 ஆயிரத்து 425 என்றும், தங்கம் 720 கிராம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கடன் ரூ.7 கோடியே 61 லட்சத்து 4 ஆயிரத்து 45 இருப்பதாகவும்,  மனைவி பிரேமலதா பெயரில் ரூ.1 கோடியே 87 லட்சத்து 34 ஆயிரத்து 38 கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் கையிருப்பாக ரூ.9 லட்சத்து 25 ஆயிரமும், மனைவி பிரேமலதா பெயரில் ரூ.22 லட்சத்து 80 ஆயிரத்து 825 இருப்பதாகவும், அவர்களை சார்ந்தவர்கள் 1-, சார்ந்தவர் 2 என்று தலா ரூ.50 ஆயிரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close