Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசு வழங்குவது 'அம்மா' அரிசி அல்ல... 'மோடி' அரிசி! -பிரகாஷ் ஜாவடேகர்

போடி: தமிழக அரசு வழங்குவது 'அம்மா' அரிசி அல்ல, அது 'மோடி' அரிசி என்று பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து போடியில் நடைபெற்ற பிரசாரத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, ''நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களில் அகண்ட அலைவரிசை இணைப்புகள் வழங்கியுள்ளோம். இதன் மூலம் பல்வேறு ஆன்லைன் சேவைகளை மக்கள் பெற்று வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அகண்ட அலைவரிசை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து இலவசங்களை கொடுத்தார்களே தவிர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம்.

போடி பகுதியில் குரங்கனி டாப் ஸ்டேசன் மலைச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்று அதற்கான விண்ணப்பம் அளித்தால் நான் உடனே நடவடிக்கை எடுப்பேன்.

தமிழகத்தில் 20 கிலோ இலவச அரிசி கொடுத்து அதை அம்மா அரிசி எனக் கூறுகின்றனர். ஆனால் அதற்கு ரூ.32 மானியமாக மத்திய அரசு தருகிறது. மாநில அரசு ரூ.3 மட்டுமே தருகிறது. அதனால், அது 'அம்மா' அரிசி அல்ல. பிரதமர் 'மோடி' அரிசி என்று தான் கூற வேண்டும்." என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close