Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்.ஆர்.காங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான என்.ஆர்.காங்கிரசின் 2-வது வேட்பாளர் பட்டியலை இன்று முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வருகின்ற மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இந்நிலையில் இன்று காலை, மீதமுள்ள 9 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி.

அதன்படி...

1. காலாப்பட்டு - விசுவநாதன்.

2. ஏம்பலம் - லட்சுமி காந்தன்.

3. நெட்டப்பாக்கம் - ராஜவேலு.

4. நெல்லித்தோப்பு - பாலாஜி.

5. மணவெளி - சுரேஷ்.

6. காமராஜ்நகர் - தயாளன்.

7. லாஸ்பேட்டை - நந்தா.சரவணன்.

8. திருபுவனை - கோபிகா.

9. ஊசுடு - வைத்தியநாதன்.


இந்த வேட்பாளர் பட்டியலில் ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக உள்ள கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், கார்த்திகேயன் ஆகியோருக்கு இந்தமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

MUST READ