Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் தனது பாதுகாவலரை விஜயகாந்த் தாக்கியதால் பரபரப்பு! (வீடியோ)

நெல்லை: மீண்டும் தனது பாதுகாவலரை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு, ராதாபுரம் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ். சிவனணைந்தபெருமாள், நான்குனேரி தே.மு.தி.க. வேட்பாளர் கே.ஜெயபாலன், பாளையங்கோட்டை ம.தி.மு.க. வேட்பாளர் நிஜாம், அம்பாசமுத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கற்பகவல்லி, திருநெல்வேலி தே.மு.தி.க. வேட்பாளர் மாடசாமி ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

அப்போது, ''இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல். தர்மத்தின் பக்கம் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, மக்கள் ஆதரவுடன் உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக சிலர் கருத்துக்கணிப்பு வெளியிட்டு வருகிறார்கள். அது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விஷச் செடிகள். புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என ஜெயலலிதா பிரசாரம் செய்தார். ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதை ஏன் அவர் விரும்பவில்லை. அண்ணா நகர் ரமேஷ் மரணத்திலும், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாதிக் பாட்ஷா மரணத்திலும் மர்மம் உள்ளது.


1967 ம் ஆண்டு அண்ணா உருவாக்கியதைப்போல், நான் கூட்டணியை உருவாக்கி உள்ளேன். அதனால் முரசு, பம்பரம், மோதிரம், கதிர் அரிவாள் நட்சத்திரம், தென்னந்தோப்பு சின்னங்களில் நீங்கள் வாக்களித்து தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துங்கள்" என்றார்.

அதன்பின் கூட்டத்தை முடித்துக் கொண்டு விஜயகாந்த் கிளம்பும்போது, அவருக்கு வழிவிடாமல் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலினால் எரிச்சல் அடைந்த விஜயகாந்த், தனது பாதுகாவலரை மீண்டும் மீண்டும் தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்தை பேட்டி காண செய்தியாளர்கள் முற்பட்டனர். அப்போதும் எரிச்சல் அடைந்த விஜயகாந்த், செய்தியாளர்களை பார்த்து நாக்கை துருத்தியதுடன் தனது பாதுகாவலரை தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ