Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதியிடம் ஸ்டாலின் பார்த்து ஆச்சர்யப்படும் குணம் என்ன..?

 

103 வயதிலும் மக்களுக்காக பாடுபடுவேன் என திமுக தலைவர் கருணாநிதி சொல்வது அவரது மன வலிமையையும், இளமையும் காட்டுகிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என கருதுகிறேன். எனக்கு 93 வயது ஆகிறது. என்னை ஓய்வெடுக்குமாறு சிலர் கூறுகின்றனர். 93 வயது அல்ல. 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன்," என தெரிவித்திருந்தார்.

தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், மு.க.ஸ்டாலின் முதல்வராக கூடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இப்போதைக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையே கருணாநிதி கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இன்று கோவை வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் என கருணாநிதி பேசியது குறித்து கருத்து கேட்டபோது, "அது அவரின் மன வலிமையையும், இளமையும் காட்டுகிறது," என ஸ்டாலின் கூறினார்.

ச.ஜெ.ரவி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close