Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கி கையிருப்பே 30 ஆயிரம்தான்... கலங்கடிக்கிறார் திப்புசுல்தான் வாரிசு!

 

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திப்புசுல்தானின் வாரிசு  நசீர் அகமது சுல்தான், சாரட் வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தேர்தல் சமயங்களில் பல ருசிகர சம்பவங்கள் நிகழ்வதுண்டு. சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் இன்று, 'நான் திப்புசுல்தானின் வாரிசு' என்று சாரட் வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் ஒருவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். தன்னை திப்புசுல்தானின் வாரிசு என்று அறிமுகப்படுத்திய அவர், தன்னுடைய பெயர் நசீர் அகமது சுல்தான் என்றார்.

தொடர்ந்து அவர் நம்மிடம், "நான் டிப்ளமோ படித்து விட்டு அட்வர்ட்டைசிங் பிசினஸ் செய்கிறேன். என்னுடைய தந்தை சையத் ஜமாலுதீன் சுல்தான். அவர் டெய்லர் தொழில் செய்தார்.

தமிழக முஸ்லிம் முகலாய ஜமாத் தலைவராக இருந்து கொண்டு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டோம். இஸ்லாமியர்களுக்குரிய முக்கியத்துவம் இன்று அரசியலில் கிடைப்பதில்லை. மேலும் விருகம்பாக்கம் தொகுதியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ளன. ஆனால் இந்த தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் கூட முஸ்லிம் இல்லை. இதனால் சுயேட்சையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். திப்புசுல்தானின் 18வது தலைமுறையைச் சேர்ந்தவன் நான். எங்கள் தலைமுறையினர் தமிழகம் முழுவதும் குடியிருக்கின்றனர். நிச்சயம் இந்த தொகுதியில் வெற்றிப் பெறுவேன்" என்றார்.

இவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் 30 ஆயிரம் ரூபாய் வங்கி இருப்பதாகவும், இருசக்கர வாகனம் லோனில் இருப்பதாகவும், மனைவி பர்வீனுக்கு 5 சவரன் நகை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.மகேஷ்

படங்கள்:
பா.காளிமுத்து

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close