Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வைகோ பேச்சை யாரும் சீரியசாக எடுக்க வேண்டாம்..!'- அன்புமணியின் ஃப்ரீ அட்வைஸ்


வைகோ பேசுவதை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி அட்வைஸ் செய்தார்.

பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இன்று மதுரை வந்தார். அப்போது, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் அன்பு மணிக்குதான் ஓட்டு போடவேண்டும் என்று. மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். விரைவில் தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் செல்லப்போகிறது. எதிர்பார்க்க முடியாத அதிவேக வளர்ச்சியை அடையும். திமுக , அதிமுக மேல் உள்ள கடுப்பில் மக்கள் பா.ம.க.விற்கு வாக்குகளை குத்தப் போகின்றனர்.

நான் சொல்லும் திட்டங்கள் ஏன் சாத்தியப்படாது? வட இந்தியாவிலே பல திட்டங்கள் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செல்கின்றன. அதைப்போல் நான் பல நாடுகள் சென்று ஆய்வு செய்து திட்டங்கள் வகுத்துள்ளேன். அது கண்டிப்பாக சாத்தியப்படும். அதற்கு மக்களும், பத்திரிகைகளும் கண்டிப்பாக ஆதரவு தரவேண்டும்.

50 வருடங்களாக திமுக, அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தாங்க. என்னதான் புதிய திட்டம் கொண்டுவந்தாங்க? பணம் மூடை மூடையாய் ஊழல் செய்வதுதான் அவர்களின் முழு திட்டமே. தேர்தல் அறிக்கையை கூட சொந்தமாக யோசிப்பதில்லை. அதைக்கூட பா.ம.க.விடம் இருந்து காப்பி அடிக்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் கடனை பன்மடங்கு உயர்த்திவிட்டார்கள். அவர் மக்களை சந்திக்காத முதல்வர். இட்லி கடை திறந்ததெல்லாம் ஒரு திட்டமா. அதை சரியா ஓட்டமுடியவில்லை. ஆனால் பா.ம.க ஆட்சியில் அப்படி இருக்காது. சிறந்த இலவச கல்வியும், மக்களுக்கு தேவையான மருத்துவமும் அதிக இடம் பிடிக்கும்.

பெண் முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பல அநியாயங்கள் நடக்கின்றன. ஓ.பி.எஸ் உடன் இருக்கும் அமைச்சர்கள் ஜெயலலிதாவின் கார் டயருக்கு கீழே படுத்து கும்பிடுகின்றனர் . இன்னும் சிலர் காரை தொட்டுக்கும்பிட்டால் போதும் என்று கும்பிட்டு விட்டு செல்கின்றனர். இது ஒரு ஆட்சியா இதற்கு விடிவு வேண்டாமா நல்ல நாகரீக அரசியல் கொண்டு வரவேண்டு, சர்வாதிகார ஆட்சியை அழிக்க வேண்டும். நான் யாரை திட்டி பேசியதே இல்லை. ஏன், ஒருமையில் கூட பேசியதில்லை. கூட்டணி எனக்கு தேவையில்லை. நான் வெற்றி பெற்ற பின் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு அமையாது. அதிக இடங்களில் பாமக வெற்றி பெறும்.

டாஸ்மாக் சம்பந்தமாக பல ஆவணங்களை வெளியிட்டுள்ளேன். எனவே நாங்கள் வந்தால் கண்டிப்பாக ஒழிப்போம். நான் பல நாடுகள் சுற்றி வந்து பல வேளாண்மையை உயர்த்தும் வகையில் திட்டங்கள் வைத்துள்ளேன். அதனை செயல்படுத்தினால் தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் கிடைக்கும். ஆன்மிக சுற்றுலா கொண்டு வருவோம்.  அதனால் அனைவரும் வியக்கத்தான் போகிறார்கள். மாவட்டங்கள் வாரியாக என்ன தேவை என்று பிரித்து செயல்படுவோம். அப்போது தான் முழுமையாக வெற்றி கிடைக்கும். எங்கள் திட்டம் அனைத்தும் அனைத்து பகுதிகளுக்கு சென்றடையும்.

திமுக, அதிமுகவும் பால் முதல் பருப்பு வரை ஊழல் செய்துள்ளது. கிரானைட்டில் இரண்டும் கூட்டுக்கொள்ளை. ஆள் கடத்தலில் ஈடுபடுகிறது அதிமுக. பா.ம.க.வின் வெற்றி அடைந்துவிடும் என்ற பயத்தில் பா.ம.க.வினரை தேடி அலைகின்றனர். வைகோ சொல்வதெல்லாம் சும்மா. அவர் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் வந்தது, சாக்கு கிடைத்துவிட்டது என்று எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் பேசுவதை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மக்கள் நலக்கூட்டணி தனியாக நிற்பது அவர்களுக்குதான் பாதிப்பு. 10 இடத்திலாவது டெபாசிட் வாங்க முயற்சிக்க வேண்டும். ஜெயலலிதா பல முறை 110 விதியை சொல்லி ஏமாத்திவிட்டார். பா.ம.க வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும்" என்று கூறினார்.


சே.சின்னதுரை

படம்:  ஈ.ஜெ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ