Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லட்சக்கணக்கில் இலவசம்...கோடிக்கணக்கில் சுரண்டல் இதுதான் அதிமுக,திமுக: வாசன் சாடல்!

ஈரோடு: மக்களுக்கு இலவசமாக லட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டு மறுபுறம் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை திமுகவும் அதிமுகவும் சுரண்டிக் கொண்டு இருக்கின்றன என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

ஈரோடு மேற்குத் தொகுதி மதிமுக வேட்பாளர் முருகன்,ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் தேமுதிக வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்,

"50 ஆண்டுகாலமாக ஊழலில் ஈடுபட்ட திமுக,அதிமுகவுக்கு மக்கள் முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.தொடர்ந்து மக்களுக்கு இலவசங்களை ஒருபுறம் லட்சக்கணக்கிலே கொடுத்து கொண்டிருக்கின்றன திமுகவும் அதிமுகவும்.மறுபுறம் கோடிக்கணக்கிலே மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை நிலை.இந்த நிலை மாற வேண்டும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் ஆட்சிதான் இப்போதைய தேவை. அது தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி அரசுதான் " என்று தெரிவித்தார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ