Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா பட்ஜெட் 10 கோடி... எனக்கு 10 லட்சமே சிரமமா இருக்கு! - திருமாவளவன் ஆதங்கம்

 

ஜெயலலிதா தற்போது ஒரு தொகுதிக்கு 10 கோடி செலவு செய்கிறார். என்னால் 10 லட்சம் செலவு செய்ய முடியுமா என்று கூட தெரியவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆதங்கத்துடன் கூறினார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு மக்கள் நலக்கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நேற்றிரவு காட்டுமன்னார் கோயில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

முதலில் பேசிய திருமாவளவன், " காட்டுமன்னார் கோயில் என்னுடைய தாய்மடி, எங்களுடைய மானம்காத்த மாவட்டம் கடலூர் மாவட்டம். 2001ல் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்றவன் திருமாவளவன். எனக்கு ஞானஸ்தானம் வழங்கியது சிதம்பரம். எனவே கடலூர் மாவட்டம்தான் என்னுடைய தாய்மடி. கடந்த தேர்தல்களில் எங்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு கட்சி வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அதில் 15 கிராமங்கள் தீக்கிரையானது. எங்களை வளரக்விடக்கூடாது என்பதற்காக அனைத்து கட்சி தலைமைக்கும் ஒருகட்டு தாள்களில் எழுதி அனுப்பியது இவர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக.

நாங்கள் மத்தியில் நடப்பது போல கூட்டாட்சியை எதிர்பார்த்தோம். ஆனால் திமுகவும் , திமுகவும் கூட்டணி ஆட்சி என்பதே இல்லை என்று கூறிவிட்டனர். அவர்களிடம் கூட்டு சேரும்போதெல்லாம் 9, 10, 11 என்ற அளவிலேயே கொடுத்தனர். ஆனால். தற்போது 25 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். 2014 சட்டமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க செங்கோட்டையனை இறக்கி 55 கோடி ரூபாய் செலவு செய்தார் ஜெயலலிதா. பணம் வெற்றி பெற்றது. தற்போது ஒரு தொகுதிக்கு 10 கோடி செலவு செய்கிறார்களாம். என்னால் 10 லட்சம் செலவு செய்ய முடியுமா என்று கூட தெரியவில்லை. அதிமுகவில் ஒபிஎஸ்  உள்பட அனைவரும் முதுகொடிந்தவர்களாக உள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் தமிழகத்தில் கூட்டாட்சி மலரும்" என்று கூறினார்.

அடுத்ததாக பேசிய முத்தரசன், " வைகோவின் பச்சைத்துண்டுக்கு பலரும் பல காரணம் கூறுகின்றனர். பாஜக தமிழிசை, ஜோசியர் அறிவுரைப்படி கட்டியுள்ளார் என்று கூறுகிறார். வைகோவின் பக்கத்து ஊர் எட்டயாபுரம். எட்டயாபுரம் முன்டாசு கவிஞன் பாரதி. அவரது வழி வந்தவர் வைகோ. அவரது கலிங்கப்பட்டி வீட்டில் வந்து விவசாய சங்கத்தினர் ஆதரவளித்தனர். அதனால் அவர்களது பிரச்னை தீரும்வரை பச்சை துண்டை அவிழ்க்க மாட்டேன் எனக் கூறியுள்ளார் வைகோ. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தாலி அறுக்கப்பட்டுள்ளது மதுவினால். மதுவினை ஒழிக்க அனைவரும் மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்குகளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

கடைசியா பேசிய வைகோ, " ஊழல், மது இல்லாத வெளிப்படை நிர்வாகம் கொண்ட ஒரு அரசாட்சி அமைய வேண்டும். இன்று நடப்பதை செல்போன் சிங்கங்கள் எனப்படும் இளைஞர்கள் கவனிக்கின்றனர். அவர்களால்தான் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. மது ஒழிப்பு பற்றி பேச எனக்கு தகுதியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3000 கிலோ மீட்டர் ஊழல், மதுவிலக்குக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டேன்.

எங்கள் கூட்டணியில் யாரிடமும் பணம் கிடையாது. மதிமுகவினர் யாரும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கக்கூடாது. அதிமுக, திமுகவினர் தேர்தலில் செலவு செய்ததை 10 மடங்காக கொள்ளையடிக்கிறார்கள். பூத் கவுண்டரில் ஒரு ரவுண்டுக்கு பத்தாயிரம் எதற்கு என்றால் ரவுண்ட் கட்டி குடிப்பதற்காக. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தணிக்கை குழு,  ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு நெறியாளப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை, கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும், அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைகள் போல் மாற்றப்படும்.

மதுவிற்காக தன் உயிரை நீத்த சசிபெருமாள் வன்னிய ஜாதி என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவரது உடலை நானும் திருமாவளவனும் எங்கள் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தோம். நாகர்கோவிலில் 9 நாட்கள் அவரது உடல் கிடந்ததே, அப்போது மதுஒழிப்பு என்று சொல்லக்கூடிய பாமக ராமதாஸ், அன்புமணி  எங்கிருந்தனர். ஆந்திராவிலே சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 12 பேர் வன்னியர்கள். அப்போது எங்கே சென்றார்கள் இவர்கள். கடந்த பத்து நாட்களாக என்னுடன்தான் உள்ளார் சசிபெருமாள் மகன் விவேக். 'ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுங்கள்' என்று சொன்னதற்கு,  'கொலைகாரிக்கு பூங்கொத்து கொடுக்க மாட்டேன்' என்று கூறியவர். இவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதனால் கடந்த பத்து நாட்களாக என்னுடன்தான் உள்ளார். இதையெல்லாம் மனதில் வைத்து வாக்களிக்க வேண்டுகிறேன்" என்று பேசினார்.

த.எழிலரசன், மு.ஜெயராஜ் (மாணவப் பத்திரிகையாளர்கள்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close