Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவருக்கு ஏன் ‘சீமான்’ என்று பெயர்?: இடிக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

மதுரை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியொன்றில் `பரதேசி எல்லாம் சீமான் என்று பேர் வைத்துக்கொள்கிறார்கள்` என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக் கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், மதுரை வந்திருந்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அவற்றுக்குப் பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், " சீமான்....சிலர் பேரு அழகா இருக்கும், அதனால் வச்சுப்பாங்க. பரதேசி எல்லாம் சீமான் என்று பேர் வச்சுப்பாங்க. அதுக்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பல. ஜெயலிதாவின் பிரசாரம் என்பது தேர்தல் பிரசாரமாக இல்லை. உயிர்க்கொல்லி பிரச்சாரமாக இருக்கிறது. ஆடுமாடுகளை அடைத்து வைப்பது போல  மக்களை கொண்டுவந்து அடைத்து வைத்துள்ளனர். அதனால் பலர் இறக்க நேர்ந்துள்ளது.

ஜெயலலிதா என்ன என்னமோ சொல்கிறார். அவருக்கும் புரியவில்லை, மக்களுக்கும் புரியவில்லை. அதனால் ஜெயலலிதா உளறிக் கொண்டிருக்கிறார். எல்லா இடங்களிலும் சோதித்து தேர்தல் ஆணையம் பணபட்டுவாடவை  தடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார். 



   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close