Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பந்தாடப்பட்ட பாமக வேட்பாளர்கள்...! - மலைக்க வைத்த மனு பரிசீலனை

 

நடைபெறவிருக்கும் தேர்தலில் பாமக சார்பில் ராமநாதபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 6812 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிகாரபூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ராமநாதபுரத்தில் அப்துல் லத்தீப், திருச்செந்தூரில் உத்தர்சிங், தூத்துக்குடியில் சேசையா பர்னாந்து ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தூத்துக்குடி பாமக வேட்பாளர் சேசையா,  தனது விண்ணப்பத்தில் பாகம் எண்ணை மாற்றி எழுதியுள்ளார். இதனாலேயே அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால், ராமநாதபுரம் பாமக வேட்பாளர் அப்துல் லத்தீப்புக்கு 10 பேர் முன்மொழிந்திருந்தும்,  கடைசி நபர் விண்ணப்பத்தில் கையெழுத்து மட்டும் போட்டுள்ளார். பெயர், விவரம் எதுவும் குறிப்பிடவில்லை. இதனாலேயே அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுவில் 10 பேர் சாட்சி கையெழுத்து போட வேண்டும். ஆனால், திருச்செந்தூர் தொகுதி பாமக வேட்பாளர் உஜ்ஜல்சிங் வேட்பு மனுவில் 9 பேர் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளனர். இதனாலேயே அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

படங்கள்: ஏ.சிதம்பரம், உ.பாண்டி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close