Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுவிலக்குப் போராளி சேலம் சசிபெருமாள் மகன் என்னுடன் பத்திரமாக இருக்கிறார்:வைகோ!

துவிலக்குப் போராளி சேலம் சசிபெருமாள் மகன் என்னிடம் பத்திரமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எஸ்.மாசிலாமணியை ஆதரித்து அவர் பேசினார்.
அப்போது அவர்," தமிழகத்தில் 1967க்குப் பிறகு இத்தேர்தலில் மிகப்பெரிய மாறுதல் வரப்போகிறது.  நாட்டில் 65% பேர் எந்தக் கட்சியும் சேராதவர்கள். இவர்களே இத்தேர்தலில் தீர்ப்பளிக்கப் போகின்றனர்.  அண்ணாதுரை ஆட்சிக் காலத்தில் கூட ஏற்படாத அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பணம் தான் பிராதானம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.  தமிழகத்தில் உள்ள ஒன்றைரை கோடி புதிய வாகாளர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.  மதுவிலக்கு விஷயத்தில் திமுக, அதிமுக இரண்டும் தமிழக மக்களுக்கு எதிரானவை.  தியாகி சசி பெருமாள் சாவுக்கு காரணமாக இருந்தது அதிமுக அரசு.  சரிபெருமாள் இறப்புக்கு முன்பு மதுவிலக்கு குறித்து வாய் திறக்காத திமுக தற்போது மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தப் போவதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

சமீபத்தில் ஜெயலலிதா தேர்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றபோது ஜெயலலிதாவை மலர்க்கொத்து வழங்கி வணங்குமாறு சசிபெருமாள் மகனுக்கு அதிமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவர் மறுத்து விட்டார் என்கிற காரணத்தால் அவருக்கு எந்த நேரமும் பாதிப்பு வரும் என்பதால், நான் என்னுடனே அழைத்து வந்திருக்கிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி தன்னை மண்ணின் மைந்தர் என்று கூறிக் கொண்டு கடந்த முறை இந்தத் தொகுதியில் ஓட்டுக்  கேட்டார். ஆனால், காவிரி நீர்ப் பிரச்சினையிலும் முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் டெல்டா மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்தவர் அவர்.  15 மாவட்டங்களைப் பாலைவனமாக்கக் கூடிய மீத்தேன் வாயு எடுப்புத் திட்டத்துக்கு அனுமதியளிக்க கையெழுத்திட்டவர் அவரது மகன் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதிக்கு ஓட்டுப்போடுவது திருவாரூர் மண்ணுக்கு செய்யும் துரோகம்.  ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடுவது தமிழகத்துக்கு செய்யும் துரோகம்.

 மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக்ஆயுக்தா  சட்டம் கொண்டுவரப்படும். அதிமுக, திமுக செய்த ஊழல்களைக் கண்டுபிடித்து சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.  மீனவர்கள் நலன் காக்கப்படும்.  விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். " என்று கூறினார்.
 
செய்தி. படங்கள் : த.க.தமிழ் பாரதன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close