Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டார் வேட்பாளர்களில் அதிக சொத்து வைத்திருப்பது இவர்கள்தான்!

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்புகளை வைத்து டாப் 10 ‘ரிச்’ வேட்பாளர்கள் யார் என்று ஒரு பட்டியல் தயாரித்தோம் (வேட்பாளர்கள் அளித்த வேட்புமனு விவரங்களைக் கொண்டு). எதிர்பார்த்த நபர்கள் முக்கிய இடங்களைப் பிடிக்க, சில சர்ப்ரைஸ்களும் இருந்தன.


113.72 கோடி ரூபாய் மொத்த சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா. கருணாநிதி அவரைவிட சுமார் 50 சதவீதம் குறைவாக 63.6 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து வைத்திருக்கிறார். 5.84 கோடி ரூபாயுடன் ஸ்டாலினுக்கு 9-வது இடம். அதே, ஸ்டாலினைவிட அதிகமாக 8.93 கோடி ரூபாயுடன் 6-வது இடத்தில் இருக்கிறார் அ.தி.மு.கவின் கோகுல இந்திரா.  



இதில் பெரும் ஆச்சரியம் என்னவென்றால், அ.தி.மு.க அமைச்சர்களான கோகுல இந்திராவும், வளர்மதியும் சொத்து சேர்த்த வேகம்தான். அதை கீழே உள்ள கிராஃபிக்ஸில் பாருங்களேன்!

 

- ர. ராஜா ராமமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ