Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'செய்வீர்களா?' எனக் கேட்கும் ஜெயலலிதா, 'செய்துவிட்டோம்' எனக் கூறாதது ஏன்? - குஷ்பு

சென்னை:  தேர்தல் பொதுக்கூட்டங்களில், 'செய்வீர்களா?' எனக் கேட்கும் ஜெயலலிதா, 'செய்துவிட்டோம்' எனக் கூறாதது ஏன்? என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்  குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.க.-காங்கிரச் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் சென்னையில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, ''தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே வெற்றியை தேடித்தரும். சென்னை மாநகர துணை மேயர் பதவியை பயன்படுத்தி பெஞ்சமின் 800 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளார்" என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும் அவர் கூறும்போது, ''தமிழகத்தில் பிரசாரம் செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்கிறார். அதற்கு பதில் ஜெயலலிதா, செய்துவிட்டோம் என கூறி வாக்கு கேட்கலாமே. கொடுத்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. அதனால்தான் அவரால் அப்படி கேட்க முடியவில்லை" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close