Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த் பிரசாரத்துக்கு கேப்டன் டி.வியில் லைவ் இல்லையா?

 

 

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தேர்தல் பிரசாரம் அவரது கட்சி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

தொண்டை பிரச்னையால் அவதிப்பட்டு வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவரது பிரசாரத்தை அவரது கட்சி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரசாரத்தின்பாேது அவர் பேச வரும் விஷயங்களை மறந்து, ஏதேதோ பேசுகிறார். மேலும், கூட்டணி கட்சியின் தொண்டர்கள் விசில் அடித்தாலோ, கோஷம் போட்டாலோ டென்ஷனாகி நாக்சை துருத்துவது, கையை கோபத்தில் நீட்டுவது, அதோடு அவர்களோடு வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறார். மேலும், மகன்கள் வளர்க்கும் நாய்களை பற்றி கதை சொல்வது, பிரியாணி செய்வது எப்படி? என்று சம்பந்தமோ இல்லாமல் பேசுகிறார்.

விஜயகாந்தின் பிரசாரம் கட்சியின் அதிகாரப்பூர்வ தொலைகாட்சி ஒன்றில் நேரடியாக ஒளிபரப்படுகிறது. பிரசாரத்தில் விஜயகாந்த் என்ன பேசினாலும், விமர்சனத்துக்குள்ளாகிறது என்றும், இது தாெடர்ந்தால் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தேமுதிக மூத்த நிர்வாகிகள் பலர், தங்களது கருத்தை பிரேமலதா மற்றும் சுதீஷிடம் எடுத்துரைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்தே, விஜயகாந்தின் பிரசாரம் நேரடி ஒளிபரப்பு செய்வது அவரது தொலைகாட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. விஜயகாந்தின் பிரசார பேச்சு எடிட் செய்யப்பட்டு பின்னர் ஒளிபரப்பப்படுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களின் பிரசாரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.



 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ