Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நூறுக்கும், பீருக்கும் ஓட்டுகளை விற்று விடாதீர்கள்..! பிரேமலதா

 

'நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் ஓட்டுக்களை விற்று விடாதீர்கள்' என்று பிரசாரத்தின்போது பிரேமலதா வேண்டுகாேள் விடுத்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் திறந்த வேனில் நின்றபடி பேசிய பிரேமலதா, " விஜயகாந்தின் கனவு திட்டமான ரேஷன் பொருட்களை வீடுதேடி வழங்க முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள். ஒரு பெரிய நடிகரே பேட்டியில், 'பணம் வாங்குபவர்களும் திருடர்கள்தான். பணம் கொடுக்கும் திருடர்களை ஏன் தலைவராக ஆக்குகிறீர்கள்?' என சொல்லி உள்ளார்.

விஜயகாந்த் முதலமைச்சரானால் பெண்கள் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கடந்த 50 ஆண்டு கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைய நீங்கள் உதவவேண்டும். லஞ்ச லாவண்யம் இல்லாத, ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் எங்கள் ஆட்சியில் இருக்கும். படித்த, படிக்காத அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் அரசாக எங்கள் அரசு அமையும். நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் ஓட்டுக்களை விற்று விடாதீர்கள். மற்றவர்களையும் ஓட்டுகளை விற்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு அரசுகளையும் நீக்குவதற்காக புனிதபோர் நடைபெற்று கொண்டிருக்கிறது. நமது முரசு நாளைய தமிழக அரசாக அமைய வேண்டும்" என்று பேசினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ