Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சீட்டாடுவதும் பல்லாங்குழி ஆடுவதும் தான் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்!'- கொதிக்கும் சீமான்!

திண்டுக்கல்: "நம் மாநிலத்தின் நிலை இலவசங்களை நம்பி இருக்கிறது.இலவச அரிசி இருந்தால்தான் வாழமுடியும் என்ற நிலை எவ்வளவு அவமானகரமானது. இன்னும் எத்தனை நாளைக்கு அரசால் இலவச அரசி போட்டுவிடமுடியும்? " என்று கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பயனற்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தவமணி பத்மாநாபனை ஆதரித்துப் பேசி வாக்குச் சேகரித்த சீமான், வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

புலியூர் பகுதியில் பேசிய அவர்," நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது.எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன. எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.அப்படி பயன் இல்லாத திட்டங்கள் எதற்காக.சொந்த நாட்டு மக்களை இலவச அரிசிக்காக கையேந்த வைத்துள்ளது எப்படி ஒரு அரசின் சாதனையாகும்.

எங்கள் ஊரில் கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள். பெண்கள் பல்லாங்குழி ஆடுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிறார்கள். ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் இல்லை என்ற நிலை உள்ளது. பொருளாதரத்தை வளர்க்க திட்டமிடாத அரசு சும்மா சோம்பி உட்கார்ந்து இருக்க பணம் கொடுக்கிறது.இந்தத் தேசம் எப்படி வளரும்...?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

 மேலும் அவர் கூறுகையில், " ஊழல் பெருகி நாட்டின் முன்னேற்றம் சீரழிந்துள்ளது அதனால் மாற்றத்தை கொண்டுவர இந்தத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுதிக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close