Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசையா? ராஜேஷ் லக்கானி பதில்

 

வாக்குப்பதிவின் போது நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசை கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, " சட்டப்பேரவை தேர்தலையொட்டி மே 5ம் தேதி முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும். சட்டப் பேரவை தேர்தலுக்காக 66,001  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடிகளில் ஆண், பெண், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என தனி தனியாக வரிசை ஏற்படுத்தப்பட உள்ளது.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் உள்ளவர்களை தவிர நடிகர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் வரிசையில் நின்றே வாக்களிக்க வேண்டும். முக்கிய பிரமுகர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க கூடுதலாக 42 செலவின பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர்" என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close