Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத்குமாருக்கு எதிராக சுயேச்சை வேட்பாளர் குமுறுகிறார்!

 

தேர்தல் சின்னம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி் தலைவர் சரத்குமார், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது  விதிமுறைக்கு மீறிய செயலாகும். எனவே வேட்பாளர் பட்டியலில் இருந்து சரத்குமார் பெயரை நீக்க வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக எஸ்.சுகுமார் என்பவர் போட்டியிடுகிறார்.

இவர் சார்பில் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு பிறகு தேர்தல் சின்னம் மற்றும் நட்சத்திர பேச்சாளர் அனுமதியை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அவர் பெற்றுள்ளார். வேட்பு மனுவிலும் தன்னை சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிற கட்சி சின்னத்தில் அவர் போட்டியிடுவது விதிமுறைக்கு மீறிய செயலாகும். எனவே வேட்பாளர் பட்டியலில் இருந்து சரத்குமார் பெயரை நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close