Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குஷ்பு, விஜயதாரணி மீது வழக்குப் பதிவு!

 

அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக தேர்தல் பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு, காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி ஆகியோர் மீது களியக்காவிளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். முன்னதாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து குமரி மாவட்டம் வந்த அவர், கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கினார். அங்கு, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாரை ஆதரித்து பேசினார்.

தொடர்ந்து, திறந்த ஜீப்பில் நித்திரவிளை, புதுக்கடை, சென்னித்தோட்டம் போன்ற பகுதிகளில் பிரசாரம் செய்தார். பின்னர், அவர் களியக்காவிளை அருகே விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட குழித்துறை பகுதிக்கு சென்றார். அங்கு விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியை ஆதரித்து பேசினார். இதற்கிடையே குழித்துறை பகுதியில் பிரசாரம் செய்ய முறையாக அனுமதி வாங்கவில்லை எனத்தெரிகிறது.

இதுகுறித்து விளவங்கோடு தேர்தல் பார்வையாளர் டேவிட் ஜெபசிங் களியக்காவிளை காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு, விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி ஆகியோர் மீது அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக களியக்காவிளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

படம்: ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ