Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’எம்.எல்.ஏ. மேக்கர்’தான்.. எம்.எல்.ஏ ஆக மாட்டாரா தமிழிசை? நட்சத்திர வேட்பாளர் ஸ்டேட்டஸ்வேட்பாளர்: தமிழிசை சௌந்தரராஜன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்.

சிறப்புகள்: மகப்பேறு சிறப்பு மருத்துவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மகள். இவரின் சித்தப்பா தொழில் அதிபர் எச்.வசந்தகுமார். தமிழிசையின் கணவர் சௌந்தரராஜன், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றுகிறார். சிறுநீரகத்துறையில் புகழ்பெற்ற மருத்துவர்.

தொகுதி: விருகம்பாக்கம்

தொகுதியின் இயல்பு: தென்சென்னை மக்களவை தொகுதிக்குள் வரும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி 2009 தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு உருவானது. வில்லிவாக்கம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சியின் 5 வார்டுகள் இந்த தொகுதிக்குள் வருகிறது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை ஆகியோர் இத்தொகுதிவாசிகள். ஏ.வி.எம் ஸ்டூடியோ, கோயம்பேடு காய்கறி அங்காடி ஆகியவையும் இத்தொகுதிக்குள்தான் அமைந்துள்ளன. 

டிசம்பர் வெள்ளத்தில் மூழ்கிப்போன எம்.ஜி.ஆர் நகர், சூளைப்பள்ளம், கான் நகர் பகுதிகள் இப்போது தொகுதியின் புது அடையாளம். ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம் என்று வெளியூரைச் சேர்ந்த உழைக்கும் தொழிலாளர்கள் அடர்த்தி அதிகம். 

தமிழிசையின் அரசியல் பயணம்:

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை பூர்வீகமாக கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபோதே அரசியல் ஆர்வம். மாணவர் அமைப்பின் தலைவராக அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் கொள்கை பிடிப்பின் காரணமாக பா.ஜ.க-வில் இணைந்தார். தென்சென்னை மருத்துவ அணி மூலம் அரசியல் பிரவேசம் தொடங்கியது.

2001ல் மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளர், 2005 ல் தென்னிந்திய மருத்துவ அணியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளரானார். 2007-ல் பா.ஜ.கட்சியின் மாநில பொதுச்செயலாளர், என அரசியலில் கிடுகிடு வளர்ச்சி கண்ட இவர், 2010-ல் தமிழக பா.ஜ.க வின் மாநிலத் துணைத் தலைவர் ஆனார். இப்போது தமிழக பா.ஜ.க. தலைவர்! 

தேர்தல் டிராக் ரெக்கார்ட்:

இதற்குமுன் ராதாபுரம், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியிலும் நின்றுள்ளார். எதிலும் வென்றதில்லை. இப்போது, விருகம்பாக்கத்தில் களம் இறங்கி இருக்கிறார். தமிழகமறிந்த முகம்தான். ஆனால், எந்தவொரு தொகுதியிலும் தனிப்பட்ட செல்வாக்கு என்பது வீரியமாக இல்லை. பரபரப்பாக வளைய வந்தாலும், இவரளவுக்கு கட்சியினரிடம் உத்வேகம் இல்லையோ என்றே தோன்றுகிறது.  

தமிழிசையின்பலம் பலவீனங்கள்:

(+)

கட்சித் தலைவர்.

பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்.

தொகுதிவாசி என்பதால் கள நிலவரம் அறிந்தவர்.

மக்களிடையே அறிமுகமான முகம்.

குற்றம் குறை சொல்ல முடியாதவர்.
 

(-)

பலவீனமான உள்கட்சிக் கட்டமைப்பு.

தேர்தல் பிரசாரம் அத்தனை பரபரப்பாக இல்லை. 

பிரதான போட்டியாளர்களின் (+)(-)
 

தனசேகரன், தி.மு.க.

 

 (+)

கவுன்சிலராக இருந்தபோது எம்.ஜி.ஆர் நகர், சூளைபள்ளம், கான் நகர் பகுதியில் தி.மு.க ஆட்சியில் பட்டா வாங்கிக் கொடுத்தது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் தொண்டு நிறுவனத்தை நிர்வகிப்பது.

விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் பகுதி செயலாளர் பொறுப்பில் பல வருடங்களாக இருப்பவர்.

ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் நின்று 14,094 வாக்குகள் வித்தியாசத்தில் 2 வது இடத்தை பெற்றவர்.

தொகுதி முழுக்க நன்கு அறிமுகமானவர்.

(-)

கட்சிக்குள் இவருக்கு எதிராக நடக்கும் உள்குத்து வேலைகள்.
     
விருகை ரவி, அ.தி.மு.க

கட்சியின் பகுதி செயலாளராக இருந்து மாவட்ட செயலாளர் ஆகி இருப்பவர். விருகம்பாக்கம் தொகுதி கிடைக்கும் என்று கனவிலும் நினைக்காதவர். ஜாக்பாட் ஆச்சரியத்தில் இருந்து மீளவே பல நாட்களானது ரவிக்கு.    

(+)

கட்சியில் அனைவரையும் அனுசரித்துச் செல்வார்.

ஆளுங்கட்சி என்ற அந்தஸ்து.
 

(-) 

டிசம்பர் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் அரசு காட்டிய மெத்தனம்.

வெள்ள நிவாரணம் கிடைக்காதவர்களின் ஏமாற்ற மனநிலை. 

கோயம்பேடு மார்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்ற குற்றசாட்டும் இருக்கிறது.

பார்த்தசாரதி, தே.மு.தி.க
 

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் நின்று வெற்றி பெற்றவர். தே.மு.தி.க தலைமை நிலையச் செயலாளர். சுருக்கமாகச் சொன்னால் விஜயகாந்தின் வலது கரம். அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற பின்பும், மூன்றே மாதத்தில் இரண்டு கட்சிகளும் முட்டிக் கொண்டதால் தொகுதிக்கு எதையும் செய்ய முடியவில்லை என்று புலம்புபவர்.

(+)

சுறுசுறுப்பாக பணியாற்றும் தொண்டர்களைப் பெற்றுள்ளார்.

தொகுதி முழுக்க நன்கு பரிச்சயமானவர். 
 

(-)

கூட்டணி பலம் குறைவு.

மழைவெள்ளத்தின் போது நலம் விசாரிக்கக் கூட தொகுதிப் பக்கமே தலைகாட்டவில்லை என்ற குற்றாச்சாட்டு!.
 

ஃபைனல் பன்ச்:

தொகுதியின் முதல் எம்.எல்.ஏ என்ற வெற்றி அந்தஸ்தை பார்த்தசாரதிக்கு இரண்டாவது தேர்தலில் தக்க வைக்க முடியுமா என்பது சந்தேகமே! எம்.எல்.ஏ-வாக அவருடைய செயல்பாடின்மை ஒரு புறமிருக்க, தொகுதியைக் கைப்பற்ற அ.தி.மு.கவும் தி.மு.க-வும் கச்சை கட்டி களமிறங்கி இருக்கின்றன. ஆளும்கட்சி என்பது அ.தி.மு.கவுக்கு பலமாக இருப்பதைவிட, பலவீனமாகவே இருக்கிறது. அது பிரசாரங்களிலும் தெரிகிறது. ஆக, இந்த சறுக்கல்கள் தி.மு.க-வுக்கு பலம் கொடுத்தாலும்,  தமிழிசை செளந்தரராஜன் பிரிக்கும் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்பதே நிதர்சனம்.ஆக இப்போதைக்கு திமுகதான் வெற்றிமுகம் காட்டி தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறது.எஸ்.முத்துகிருஷ்ணன்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ