Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’எம்.எல்.ஏ. மேக்கர்’தான்.. எம்.எல்.ஏ ஆக மாட்டாரா தமிழிசை? நட்சத்திர வேட்பாளர் ஸ்டேட்டஸ்



வேட்பாளர்: தமிழிசை சௌந்தரராஜன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்.

சிறப்புகள்: மகப்பேறு சிறப்பு மருத்துவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மகள். இவரின் சித்தப்பா தொழில் அதிபர் எச்.வசந்தகுமார். தமிழிசையின் கணவர் சௌந்தரராஜன், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றுகிறார். சிறுநீரகத்துறையில் புகழ்பெற்ற மருத்துவர்.

தொகுதி: விருகம்பாக்கம்

தொகுதியின் இயல்பு: தென்சென்னை மக்களவை தொகுதிக்குள் வரும் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி 2009 தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு உருவானது. வில்லிவாக்கம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சியின் 5 வார்டுகள் இந்த தொகுதிக்குள் வருகிறது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை ஆகியோர் இத்தொகுதிவாசிகள். ஏ.வி.எம் ஸ்டூடியோ, கோயம்பேடு காய்கறி அங்காடி ஆகியவையும் இத்தொகுதிக்குள்தான் அமைந்துள்ளன. 

டிசம்பர் வெள்ளத்தில் மூழ்கிப்போன எம்.ஜி.ஆர் நகர், சூளைப்பள்ளம், கான் நகர் பகுதிகள் இப்போது தொகுதியின் புது அடையாளம். ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம் என்று வெளியூரைச் சேர்ந்த உழைக்கும் தொழிலாளர்கள் அடர்த்தி அதிகம். 

தமிழிசையின் அரசியல் பயணம்:

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை பூர்வீகமாக கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபோதே அரசியல் ஆர்வம். மாணவர் அமைப்பின் தலைவராக அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் கொள்கை பிடிப்பின் காரணமாக பா.ஜ.க-வில் இணைந்தார். தென்சென்னை மருத்துவ அணி மூலம் அரசியல் பிரவேசம் தொடங்கியது.

2001ல் மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளர், 2005 ல் தென்னிந்திய மருத்துவ அணியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளரானார். 2007-ல் பா.ஜ.கட்சியின் மாநில பொதுச்செயலாளர், என அரசியலில் கிடுகிடு வளர்ச்சி கண்ட இவர், 2010-ல் தமிழக பா.ஜ.க வின் மாநிலத் துணைத் தலைவர் ஆனார். இப்போது தமிழக பா.ஜ.க. தலைவர்! 

தேர்தல் டிராக் ரெக்கார்ட்:

இதற்குமுன் ராதாபுரம், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியிலும் நின்றுள்ளார். எதிலும் வென்றதில்லை. இப்போது, விருகம்பாக்கத்தில் களம் இறங்கி இருக்கிறார். தமிழகமறிந்த முகம்தான். ஆனால், எந்தவொரு தொகுதியிலும் தனிப்பட்ட செல்வாக்கு என்பது வீரியமாக இல்லை. பரபரப்பாக வளைய வந்தாலும், இவரளவுக்கு கட்சியினரிடம் உத்வேகம் இல்லையோ என்றே தோன்றுகிறது.  

தமிழிசையின்பலம் பலவீனங்கள்:

(+)

கட்சித் தலைவர்.

பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்.

தொகுதிவாசி என்பதால் கள நிலவரம் அறிந்தவர்.

மக்களிடையே அறிமுகமான முகம்.

குற்றம் குறை சொல்ல முடியாதவர்.
 

(-)

பலவீனமான உள்கட்சிக் கட்டமைப்பு.

தேர்தல் பிரசாரம் அத்தனை பரபரப்பாக இல்லை. 

பிரதான போட்டியாளர்களின் (+)(-)
 

தனசேகரன், தி.மு.க.

 

 (+)

கவுன்சிலராக இருந்தபோது எம்.ஜி.ஆர் நகர், சூளைபள்ளம், கான் நகர் பகுதியில் தி.மு.க ஆட்சியில் பட்டா வாங்கிக் கொடுத்தது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் தொண்டு நிறுவனத்தை நிர்வகிப்பது.

விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் பகுதி செயலாளர் பொறுப்பில் பல வருடங்களாக இருப்பவர்.

ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் நின்று 14,094 வாக்குகள் வித்தியாசத்தில் 2 வது இடத்தை பெற்றவர்.

தொகுதி முழுக்க நன்கு அறிமுகமானவர்.

(-)

கட்சிக்குள் இவருக்கு எதிராக நடக்கும் உள்குத்து வேலைகள்.
     
விருகை ரவி, அ.தி.மு.க

கட்சியின் பகுதி செயலாளராக இருந்து மாவட்ட செயலாளர் ஆகி இருப்பவர். விருகம்பாக்கம் தொகுதி கிடைக்கும் என்று கனவிலும் நினைக்காதவர். ஜாக்பாட் ஆச்சரியத்தில் இருந்து மீளவே பல நாட்களானது ரவிக்கு.    

(+)

கட்சியில் அனைவரையும் அனுசரித்துச் செல்வார்.

ஆளுங்கட்சி என்ற அந்தஸ்து.
 

(-) 

டிசம்பர் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் அரசு காட்டிய மெத்தனம்.

வெள்ள நிவாரணம் கிடைக்காதவர்களின் ஏமாற்ற மனநிலை. 

கோயம்பேடு மார்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்ற குற்றசாட்டும் இருக்கிறது.

பார்த்தசாரதி, தே.மு.தி.க
 

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் நின்று வெற்றி பெற்றவர். தே.மு.தி.க தலைமை நிலையச் செயலாளர். சுருக்கமாகச் சொன்னால் விஜயகாந்தின் வலது கரம். அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்ற பின்பும், மூன்றே மாதத்தில் இரண்டு கட்சிகளும் முட்டிக் கொண்டதால் தொகுதிக்கு எதையும் செய்ய முடியவில்லை என்று புலம்புபவர்.

(+)

சுறுசுறுப்பாக பணியாற்றும் தொண்டர்களைப் பெற்றுள்ளார்.

தொகுதி முழுக்க நன்கு பரிச்சயமானவர். 
 

(-)

கூட்டணி பலம் குறைவு.

மழைவெள்ளத்தின் போது நலம் விசாரிக்கக் கூட தொகுதிப் பக்கமே தலைகாட்டவில்லை என்ற குற்றாச்சாட்டு!.
 

ஃபைனல் பன்ச்:

தொகுதியின் முதல் எம்.எல்.ஏ என்ற வெற்றி அந்தஸ்தை பார்த்தசாரதிக்கு இரண்டாவது தேர்தலில் தக்க வைக்க முடியுமா என்பது சந்தேகமே! எம்.எல்.ஏ-வாக அவருடைய செயல்பாடின்மை ஒரு புறமிருக்க, தொகுதியைக் கைப்பற்ற அ.தி.மு.கவும் தி.மு.க-வும் கச்சை கட்டி களமிறங்கி இருக்கின்றன. ஆளும்கட்சி என்பது அ.தி.மு.கவுக்கு பலமாக இருப்பதைவிட, பலவீனமாகவே இருக்கிறது. அது பிரசாரங்களிலும் தெரிகிறது. ஆக, இந்த சறுக்கல்கள் தி.மு.க-வுக்கு பலம் கொடுத்தாலும்,  தமிழிசை செளந்தரராஜன் பிரிக்கும் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்பதே நிதர்சனம்.ஆக இப்போதைக்கு திமுகதான் வெற்றிமுகம் காட்டி தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறது.



எஸ்.முத்துகிருஷ்ணன்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close