Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெயில் கொடுமை... பிரசாரத்தில் மயங்கி விழுந்த காங்கிரஸ் பிரபலம்!

மதுரை: காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட போது வெயில் கொடுமை தாங்கமுடியாமல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், பிரசார வேனிலேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் பீ.பி.குளம் பகுதியில் வேனில் பிரசாரம் மேற்கொண்டார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர். மிகவும் ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்த திருநாவுக்கரசர், வெயில் கொடுமை தாங்க முடியாமல் திடீரென பிரசார வேனிலேயே மயக்கம் அடைந்து விழுந்தார்.

இதை கண்ட காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும், அவரை உடனே மீட்டு அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்திற்கு பின் சிகிச்சை முடிந்து மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த திருநாவுக்கரசரை காங்கிரஸ் பிரமுகர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஐ எம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட்' எனக்கு ஒன்றும் இல்லை. நான் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு தனது பிரசாரத்தை மீண்டும் தொடர்ந்தார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, ''திடீரென்று அவருக்கு நீர்ச்சத்து குறைந்ததாலும், ரத்த அழுத்தம் அதிகமானதாலும், மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. வேறு பயப்படும்படியாக ஒன்றும் இல்லை“ என்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ