Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டுத் தடை...திமுக- அதிமுகதான் குற்றவாளிகள்: ராமதாஸ் மூர்க்கம்!

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் திமுக மற்றும் அதிமுக தான் குற்றவாளிகள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடத்த முடியாமல் போனதற்கு யார் காரணம் என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கலைஞரும் வார்த்தைப் போர் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட விஷயத்தில் இருவருமே குற்றவாளிகள் எனும் போது, இதில் தங்களுக்கு சம்பந்தமே இல்லை என்பது போல இருவரும் நடந்து கொள்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.

தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களின் இந்த கருத்துக்களை கண்டிக்கக்கூட முன்வராத  கலைஞர், இப்போது அதே காங்கிரசுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தப்போவதாக கூறுவதையும், ஜல்லிக்கட்டுக்காக துரும்பைக்கூட அசைக்காத ஜெயலலிதா, தமது அரசால் தான் ஜல்லிக்கட்டு சாத்தியம் என்று கூறுவதையும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

அடுக்கடுக்காக துரோகங்களை செய்து விட்டு ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக செயல்படுவது போல நடித்து தமிழ்நாட்டு மக்களை முட்டாள்களாக்கும் முயற்சியில் கலைஞரும், ஜெயலலிதாவும் ஈடுபடாமல் இருப்பதே நல்லது." என்று குறிப்பிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ