Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அவர் படி, படி என்றார்... இவர் குடி, குடி என்கிறார்!' - யாரைக் குறிப்பிடுகிறார் குஷ்பு?

சென்னை: 'காமராஜர் மக்களை படி, படி என்றார். ஆனால் ஜெயலலிதாவோ, மக்களை குடி, குடி என்கிறார்'  என்று தேர்தல் பிரசாரத்தின்போது குஷ்பு கூறினார்.

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ''தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் திருவாலங்காட்டில் உள்ள சர்க்கரை ஆலை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். திருவள்ளூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

கருணாநிதி சொன்னதை செய்வார். செய்வதைதான் சொல்வார். கடந்த தி.மு.க. ஆட்சியில் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெண்கள் சுயமாக இருக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. ஆட்சி காலத்தில் சுய உதவிக்குழுக்கள் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா அந்த திட்டத்தை முடக்கி விட்டார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச செல்போன் வழங்கப்படும் என கூறியிருப்பது ஏமாற்று வேலை. ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, கடந்த 5 ஆண்டு காலத்தில் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைகூட ஜெயலலிதா சந்திக்கவில்லை.

காமராஜர் மக்களை படி, படி என்றார். ஆனால் ஜெயலலிதாவோ, மக்களை குடி, குடி என்கிறார். அதனால், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று கருணாநிதி 6-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பார்" என்றார் உறுதியாக.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ