Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத்குமார் காரில் 9 லட்ச ரூபாய்! அதிரடி பறிமுதல்

தூத்துக்குடி: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரில் இருந்து ரூ.9 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில்,  அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடுகிறார் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரு‌மான சரத்குமார். இவர், தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம்,  திருச்செந்தூரை அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் காரையும் அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டடுள்ளனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பதை அவர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர்.

உடனே அந்த பணம் அனைத்தையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அதை திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கூறும்போது, ''உரிய ஆவணங்கள் இன்றி பணம் அந்த காரில் வைத்திருந்ததை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். அந்த பணத்திற்குண்டான ஆவணங்களை அவர்கள் காட்டும்பட்சத்தில் அந்த பணம் அவர்களிடம் திருப்பி அளிக்கப்படும்" என்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close