Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விகடன் கார்ட்டூன்/டூடுல் போட்டி!

 

நீங்க உங்க வேலைக்கு இடையில போரடிக்கும்போது Doodle பண்றவரா?

சீரியசான விஷயங்களை கொஞ்சம் ஜாலியா வரையலாம்னு தோணுதா?

விறுவிறுப்பா போய்க்கிட்டு இருக்கிற அரசியல கொஞ்சம் கலாய்க்கலாம்னு நெனைக்கறீங்களா? உங்கள தான் பாஸ் தேடிகிட்டு இருக்கோம். விகடன்ல உங்க கார்ட்டூன் வர்றதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு.

இந்த சட்டசபை தேர்தல்தான் நீங்க வரைய வேண்டிய களம். அது கூட்டணி கலாட்டாவா இருக்கலாம், தலைவர்களோட அரசியல் அஜெண்டாக்களா இருக்கலாம், மகளிர் அணி செய்த ரெட் வெல்வெட் 'கேக்'கா இருக்கலாம்.

கமான், யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.

உங்க கார்ட்டூன்/டூடுல்களை cartooncontest@vikatan.comங்கிற  இ மெயிலுக்கு அனுப்பி வையுங்க. நீங்கள் அனுப்பும் கார்ட்டூன்களில் சிறந்தவை தேர்ந்தெடுக்கபட்டு,  ஜூனியர் விகடனில் வெளியாகும். மற்றவை தொடந்து விகடன் இணைய தளத்தில் வெளியாகும்.



நிபந்தனைகள் :

1. ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். எல்லா படைப்புகளும், May16, 2016 மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

2. ஒவ்வொரு படைப்புடனும் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும்  இ மெயில் முகவரி ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. ஒவ்வொரு கேலிச்சித்திரங்களும் அனுப்புனரின் படைப்பு என்றும், மற்றொருவருடையது அல்ல என்றும் உறுதியளிக்கப்பட வேண்டும்.

4. படைப்புகள் இதற்கு முன் பத்திரிக்கைகளிலோ, இணையத்திலோ அல்லது வேறு ஊடகங்களிலோ வந்திருக்கக் கூடாது.

5. ஓவியங்கள் JPEG, TIFF, bitmap or PDF வடிவமைப்பில் ஏதாவது ஒன்றிலும், 300 dpi அல்லது அதற்கு மேற்பட்ட தரத்திலோ இருத்தல் அவசியம்.

6. ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

7. போட்டியில் கலந்து கொள்ளும் சித்திரங்களை முழுமையாகவோ, பகுதியாகவோ விகடன் பத்திரிக்கைகள் மற்றும் விகடன் இணையதளங்களில் பிரசுரிக்க விகடன் குழுமத்திற்கு முழு உரிமை உண்டு.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close