Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'முதல்வர் கனவு' வீரலட்சுமி பகீர் புகார்!

சென்னை: பல்லாவரத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனைக்குத் தீ வைத்து எரித்தும், வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் விநியோகம் செய்தும் திமுக மற்றும் அதிமுகவினர் தொடர் அராஜகங்களில் ஈடுபடுவதாக மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர் வீரலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில்,  மக்கள் நலக் கூட்டணியில் தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் வீரலட்சுமி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று (சனி) பல்லாவரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், " பல்லாவரம் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பணிமனைக்குக் கூலிப் படை மூலம் தீ வைத்து  எரித்துள்ளனர். இந்தச் சதிச் செயலுக்கு திமுக அல்லது அதிமுகதான் காரணம் என்று சந்தேகம் வருகிறது. இது தொடர்பாக காவல்துறையிடமும் தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தோல்வி பயத்தால் அதிமுகவும் திமுகவும்  பல்லாவரம் தொகுதியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தரப்பில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. அதே போல அதிமுகவினரும் செயல்படுகின்றனர். அவர்களால் எனக்கும் எனது கட்சியினருக்கும் உயிர்ப் பாதுகாப்பு இல்லை. எனவே உடனடியாகக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.           

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ