Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்படுமா? லக்கானி என்ன சொல்கிறார்?

 

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இல்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், " வரும் 12ம் தேதி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக தலைமை தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி, தமிழக பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர்களுடன் கலந்துரையாட உள்ளா். அப்போது,  சட்டமன்ற தேர்தல் குறித்த கடைசி கட்ட ஏற்பாடுகள், பிரச்னைகள் பற்றி ஆலோசிக்கப்படும்.

சட்டமன்றத் தேர்தலின் போது 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 50 தொகுதிகளில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஆர்.கே.நகர், பெரம்பூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்படும்" என்று  கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close