Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுகவும் காங்கிரசும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்: மு.க.ஸ்டாலின்!

மதுரை: திமுகவும் காங்கிரசும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,  மதுரை பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற பிரசாரக்  கூட்டத்தில் ராகுலுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், " தமிழகத்தில் பல அரிய நல்ல திட்டங்களை கொண்டு வந்த கூட்டணி திமுக- காங்கிரஸ் கூட்டணி. சேது சமுத்திர திட்டம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவும் கொண்டு வரப்பட்ட திட்டம். இந்த திட்டம் தொடங்கி  வைக்கப்பட்ட இடமும் இந்த மதுரைதான். வாஜ்பாய் மற்றும் சோனியாகாந்தி இருவருமே நாட்டிற்கு பயன்படும் திட்டங்களில் அரசியலை புகுத்தியது கிடையாது. அதேபோல்,  கருணாநிதியும் மாநில அரசின் நலத்திட்டங்களில் அரசியலை புகுத்தியது கிடையாது.

நோக்கியா நிறுவனம் நிறுவப்பட்டது, சென்னை மெட்ரொ ரயில் திட்டம், மதுரவாயல் பறக்கும்சாலை திட்டம், சரக்குகளை கையாள்வதற்கு எண்ணூர் துறைமுகத்திலே விரிவாக்கப்பணிகள், திருச்சியிலே இந்திய மேலாண்மை நிறுவனம், சிறுபான்மையின மக்களை அச்சுறுத்திய பொடா சட்டம் நீக்கப்பட்டது உள்ளிட்ட பல திட்டங்களும், தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தையும் பெற்றுத் தந்த ஆட்சிதான் திமுக ஆட்சி.

திமுக ஆட்சியின் போது அமைச்சர்களை அடுத்த நொடியே தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. இதனால்தான் நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் வெளியேறியது. சென்னை எண்ணூர் பறக்கும் சாலை திட்டத்தை முடக்கியது அதிமுக ஆட்சி. நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் என்றாவது தமிழக பிரச்னை குறித்து பேசியதுண்டா? காவிரி இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறியிருக்கிறது அதிமுக ஆட்சி. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலே 13-வது மாநிலமாக தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம், விவசாயத்தில் 21-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஊழலில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. இதை நான் சொல்லவில்லை. தேசிய பொருளாதார புள்ளிவிபரம் ஒன்று சொல்கிறது. பால் விலையையும், மின்கட்டணத்தையும் உயர்த்திவிட்டு இப்போது பால் விலையை குறைப்பதாகவும், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக தருவதாகவும் கூறுகிறார் ஜெயலலிதா.

திமுக வெற்றி பெற்றால் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் இல்லாத ஒரு ஆட்சி, கட்டப்பஞ்சாயத்து, ரெளடியிசம் இல்லாத ஒரு ஆட்சி, போலீஸ் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பளிக்கும் ஒரு நல்ல ஆட்சி அமையும். தொழில் துவங்க ஒற்றைசாளர முறையில் 100 நாட்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'  என்று கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ