Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவை உலக நாயகன் ஆக்குவேன்! -அடடே அன்புமணி

கடலூர்: உலக நாடுகளின் முன்னேற்றத்தையும் அங்குள்ள வேளாண்மை தொழில்நுட்பத்தையும் உங்களுக்காக இங்கு கொண்டு வருவேன் என்று கடலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

கடலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைக்கண்ணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசும்போது, ''பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையைத்தான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் காப்பியடித்துள்ளன. ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. காப்பியடித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குத்தான். அ.தி.மு.க., தி.மு.க.வால் மதுவையும், ஊழலையும் ஒழிக்க முடியாது. ஊழல் அவர்களின் ரத்தத்தில் ஊறி போய் இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி பா.ம.க.வின் காலம், உழைக்கும் மக்களின் காலம். இலவச பொருட்களை தரமாட்டோம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியுமா? ஆனால், நாங்கள் இலவச பொருட்களை தரமாட்டோம். அதற்கு பதிலாக இலவச கல்வி, சுகாதாரத்தை அளிப்போம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் மிச்சப்படுத்தி தரப்போகிறேன்.

எனவே ஓட்டுக்கு யாராவது பணம் கொடுத்தால் அதை நீங்கள் வாங்கக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரப்போகிறேன். உலக நாடுகளுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள முன்னேற்றத்தை இங்கே கொண்டு வர வேண்டும் என்ற ஆதங்கம் என்னிடம் உள்ளது. வேளாண்மையில் சிறந்து விளங்கும் இஸ்ரேல் நாட்டில் உள்ள வேளாண்மை தொழில்நுட்பத்தையும் உங்களுக்கு கொண்டு வருவேன்.

சுனாமி, தானே புயல், வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நான் பேசினேன். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வை சேர்ந்த 37 எம்பிக்களும் குரல் எழுப்பினார்கள். மேலும், கடலூர் மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, நேரில் பார்க்க வராத முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது ஓட்டு பிச்சை எடுக்க மட்டும் வந்துள்ளார்" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close