Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்ன செய்தார் ஜெயலலிதா? கேள்வி கேட்கும் வடமாநில அமைச்சர்

 

ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் நலனுக்காக எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னெடுக்கவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜாவை ஆதரித்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காலை வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதி தொழில் வளர்ச்சிக்கும், மனித வள மேம்பாட்டிற்கும் மிகப்பெரிய வாய்ப்புள்ள இடமாக திகழ்வதாகவும், ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா எந்த ஒரு வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளவில்லை என்றும் விமர்சித்தார்.

குறிப்பாக சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட போது, அவர் உடனடியாக நேரில் வந்து தொகுதி மக்களை சந்திக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பியூஷ் கோயல், மக்களுக்கு சேவை செய்யாத எந்த ஒரு வேட்பாளரும் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என்றும், அதனடிப்படையில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தேர்தலில் தோல்வியடையக் கூடியவர் தான் என்றும் கூறினார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close