Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஆம்.. கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம்!’- ஸ்டாலின்

 

'கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம். இனிமேல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று அனைத்து இடங்களிலும் நானே சொல்லி வந்திருக்கிறேன்' என்று என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளார் மு.க.ஸ்டாலின்  கூறினார்.

என்டிடிவி தொலைகாட்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்,  திமுகவின் திட்டங்கள், பலம் குறித்து பேசினார்.

நீங்கள் தவறு செய்துவிட்டதாக ஊழல் விவகாரத்தில் தொழிற்துறையினரிடம் சொன்னீர்கள். ஊழல் என்பது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின்,  " வளர்ச்சி... வளர்ச்சி... ஒன்லி. கரப்ஷன், கலெக் ஷன் இல்லாமல் ஒரு கவர்மென்டை ஃபார்ம் பண்ணனும்னு சொல்லிட்டு, இன்றைக்கு தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்போறோம் என்று சொல்லியிருக்கிறோம்.

நானே ஒவ்வொரு கூட்டத்திற்கும் சென்று, தெரிந்தோ, தெரியாமலேயோ அரசோ, எங்களுடையே கட்சிக்காரர்களோ தவறு செய்திருக்கலாம். இனிமேல் தவறுகள் நடக்காமல் காத்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று நானே அனைத்து இடங்களிலும் சொல்லி வந்திருக்கிறேன்."

வளர்ச்சி..வளர்ச்சி என்று கூறும் போது அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறீர்கள்?

"தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிக்கிறோம். வெளி மாநிலத்தில் இருந்து, வெளிநாட்டில் இருந்து தொழிற்சாலைகள் வரும்போது அவர்களுக்கு சில முன்னுரிமை கொடுக்கிறோம். அதோடு சலுகைகளும் கொடுக்கப்போகிறோம். ஒற்றைச் சாளர முறையில் 100 நாட்களில் எதையாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பண்ணப்போறோம். உள்ளூர் பிரமுகர்கள் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு சில சலுகைகள் கொடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறாேம். இதனால்தான் வளர்ச்சியை முக்கியமாக வைத்துதான் பண்ணப்போறோம். ஏனென்றால், இளைஞர்கள் வந்து வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி என்று தான் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அடுத்து வேலைவாய்ப்பு கேட்கிறார்கள். இதனால் முதலில் இதனை நிறைவேற்றுவதுதான் எங்களுடையே லட்சியம், நோக்கமாக இருக்கும். "

தமிழகத்தில் முதல்வர் என்பது அணுக முடியாத நபராக இருக்கிறாரே, இதனால் மக்கள் மனநிலை மாறும் என்கிறீர்களா?

" 5 முறை கலைஞர்தான் முதலமைச்சராக இருந்திருக்கிறார். அவருடைய காலங்களில்தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அதனால்தான் 6வது முறையாக கலைஞர்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். மக்களும் அதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "


நீங்கள் துணை முதல்வர், உங்கள் தந்தை முதலமைச்சராக இருந்திருக்கிறீர்கள். மத்திய அரசுக்கும், மாநில அரசும் உள்ள உறவு எப்படி இருக்கிறது. தற்போது மோடி அரசுடனான உறவு எப்படி இருக்கிறது?

"மத்திய அரசும், மாநில அரசுக்கும் இடையேயான உறவு நல்லாதான் இருக்கும், அதில் எந்த பிரச்னையும் கிடையாது. பிரச்னைகள் அடிப்படையில்தான் சில கருத்துகளை தெரிவிப்பார்கள். மாநில அரசு வந்து மத்திய அரசிடம் சுமுகமாக சென்றுதான் சிலவற்றை செய்து கொள்ள வேண்டும். கொள்கை முடிவுகள் தனித்துவமானது."

மோடி பற்றி..

சொல்வதற்கு ஒன்றுமில்லை. நல்ல உறவு இருக்கிறது.

நீங்கள் ஏன் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?


"ஏற்கனவே நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இருக்கிறோம். இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே இருந்து இருக்கிறோம். இடையில் கூட்டணி முடிவுக்கு காரணம், இலங்கை தமிழர் பிரச்னையிலால்தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம். மற்றபடி ஒன்றுமில்லை."

நாடளுமன்றத்திலும் இந்த கூட்டணி தொடருமா?


"அது நாடாளுமன்ற தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது ஒன்றும் சொல்ல முடியாது."



உங்கள் குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறதாக சொல்கிறார்களே?

"இல்ல... இல்ல... அது வந்து பிளான் பண்ணி எதிர்க்கட்சிகள், மாற்று கட்சிகள் திட்டமிட்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அது இல்லை என்று இப்போது நிரூபணமாகி கொண்டிருக்கிறது. இதனால்தான் திமுகவுக்கு இந்த முன்னேற்றம் இருந்து கொண்டு இருக்கிறது."

விஜயகாந்தால் யாருக்கு பாதிப்பு? உங்களுக்கா, இல்லை அதிமுக-வுக்கா?


"வெற்றியை தீர்மானிக்கிற சக்தி விஜயகாந்துக்கு கிடையாது. அவரால் அதிமுகவின் ஓட்டுகள் பிரியும்."

எல்லா துறைகளிலும் ஓய்வு என்ற விஷயம் உள்ளது. ஆனால் உங்கள் தந்தை 90 வயதுக்கு மேலும் இவ்வளவு பணியாற்றுகிறாரே?

"எனக்கு 63 வயது ஆகிறது. நான் இளைஞர் கிடையாது. எனது தந்தைக்கு 93 வயதானாலும் 39 வயதுடையவர் போல் உழைத்துக் கொண்டிருக்கிறார்."

நேற்று இதே என்டிடிவிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்தார். அதனை இங்கே க்ளிக் செய்யவும்...
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ