Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய வாக்காளர்கள் விஜயகாந்தை முதல்வராக ஏற்கத் தயாராக இல்லை என்கிறார் இவர்!

 

"புதிய வாக்காளர்கள் விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை" என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழகத்தில் உள்ள 1 கோடியே 20 லட்சம் புதிய வாக்காளர்கள் திமுக வரக்கூடாது என நினைக்கிறார்கள். அதிமுக இருக்க கூடாது என்றும் நினைக்கிறார்கள். அதே நேரத்தில் விஜயகாந்தை எந்த நிலையிலும் முதல்வராக ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

எனவே இந்த ஒரு கோடியே 20 லட்சம் புதிய வாக்காளர்களை மக்கள் நலக்கூட்டணி நம்பும் என்றால்,  அந்த கூட்டணி வர இருக்கும் தேர்தலில் மிகப் பரிதாபகரமான தோல்வியை சந்திக்கும். இந்த கூட்டணிக்கு ஒன்றை இலக்கத்தில்  சட்டமன்றத்தில் இடம் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close