Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட... லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு யாருக்குத் தெரியுமா?

 

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்து நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் வாக்கு கேட்டுள்ளார்.

கோவை, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் அரங்கில் “நட்புடன் வானதி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில், “நாடு முன்னேற்றமடைய பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் வானதி சீனிவாசன். அவரது செயல்பாடுகள் மற்றும் அனைவரிடத்திலும் எளிமையாகப் பழகும் குணம் காரணமாக எந்தக் கட்சியிலும் சாராத நான் அவருக்கு ஆதரவாக உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன்.

வானதி துணிச்சலாகப் போராடி இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றியவர். எனவே, பெண்களின் நலனில் அக்கறை கொண்ட வானதி சீனிவாசனை வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ