Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்படி உறுதி எடுக்க முடியுமா? தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பிரேமலதா சவால்!

வேலூர்: ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று உங்களால் உறுதி எடுக்க முடியுமா என்று தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு பிரேமலதா சவால் விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட தே.மு.தி.க. மாநில மகளிர் அணி தலைவி பிரேமலதா, ஆம்பூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.வாசுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோது, ''தமிழகத்தில் தற்போது தேர்தல் குறித்து கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றது.

அவை கருத்துக் கணிப்புகள் அல்ல, கருத்து திணிப்புகள். வருகின்ற மே 19-ம் தேதி அந்த கருத்துக் கணிப்புகள் தவிடு பொடியாகிவிடும். தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. 130 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது தான் உண்மை.

தமிழகத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு அளியுங்கள். நாங்கள் வெற்றி பெற்றால், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். அனைத்துத் துறைகளிலும் ஊழல், லஞ்சம் இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும்.

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம், பணம் கொடுக்க மாட்டோம் என கேப்டன் விஜயகாந்த் உறுதி எடுத்துக் கொண்டார். அதேபோல மக்களாகிய நீங்களும், உங்களுடைய ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். தி.மு.க., அ.தி.மு.க.வினர் இப்படி உறுதி எடுக்க முடியுமா? இதை நான் அவர்களுக்கு சவாலாக விடுகிறேன்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ