Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரசார செலவுக்காக 9 லட்சம் வைத்திருந்தேன்..! சரத்குமார் விளக்கம்

 

திருச்செந்தூர் அருகே வாகன சோதனையின் போது பிடிபட்ட பணம் பிரசார செலவிற்காக கையில் வைத்திருந்தது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ‪திருச்செந்தூர்‬ தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் விலக்கில் பறக்கும்படையினர் கடந்த 7ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்செந்தூர் அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் பிரசார வாகனத்தில் இருந்து 9 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ‪தூத்துக்குடி‬ வருமானவரித்துறை துணை ஆணையர் ஜமுனாராணி முன்பாக விளக்கமளித்த சரத்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கூறிய அவர், தனது வேட்புமனுவில் கையிருப்பாக 30 லட்சம் ரூபாய் உள்ளதாக தெரிவித்திருந்ததாகவும், அதிலிருந்து 9 லட்சத்தை கையிருப்பாக வைத்துள்ளதாகவும், அதற்கு உரிய ஆவணம் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வதற்காக கையில் வைத்திருந்ததாகவும் சரத்குமார் விளக்கமளித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ